மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேரும். மனமகிழ்ச்சியாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுடகாரியங்கள் மீண்டும் நடக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடை விலகி நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று எதிர்பாராத வரவு இருக்கும். அதிர்ஷ்டம் அடிக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். நிதி நிலைமை சீராகும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் செலுத்துங்கள். மேலும் நன்மையை பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலை கிடைப்பதிலிருந்து வந்த சிரமங்கள் நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். கை நிறைய சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நேரத்தை வீணடிக்காமல் இருந்தால் மட்டும் போதும். வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடலாம். கைபேசியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். வேலையில் மன நிறைவு இருக்கும். முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நஷ்டம் கூட லாபகரமாக மாறும் நாள் இன்று.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். பிரிந்த உறவுகளோடு ஒன்று சேருவீர்கள். வேலையில் எதிரியாக இருந்தவர்கள் கூட, நண்பர்களாக மாறுவார்கள். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் கவனம் முழுவதும் வேலையிலும் வியாபாரத்திலும் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தனலாபம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வெற்றிவாகை சூடுவீர்கள். தலைகுனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு உண்டான வாய்ப்புகள் அமையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மன நிம்மதி அடைவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். செல்லும் இடமெல்லாம் செல்வாக்கு உயரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். வாழ்க்கை தரத்தை உயர்த்தும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அன்பு பாசம் வெளிப்படும் நாள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் சுபகாரி நிகழ்ச்சிகள் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு தேவை. நேரத்தை வீணடிக்க கூடாது. அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிடக்கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று நிதானத்தோடு செயல்பட வேண்டும். அவசரம் வேண்டாம். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. அதிக வட்டிக்கு கடன் வாங்க கூடாது. தேவையில்லாத பஞ்சாயத்துக்கு போகாதீங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் மனக்குழப்பம் நீங்கி தெளிவு அடையக்கூடிய நாள் இன்று. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்து தடை நீங்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று டென்ஷன் ஆக கூடாது. முக்கியமான வேலையில் அலட்சியம் கூடாது. தேவையற்ற மறதியால் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. அடுத்தவர்களோடு பேசும்போது கவனம் தேவை. முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
Tags:
Rasi Palan