மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சாந்தமான பொறுமையான நாளாக இருக்கும். இந்த வருடத்தின் கடைசி நாள் அல்லவா. இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, இந்த நாளை சந்தோஷமாக கடந்து செல்லுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். நல்லதே நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். இத்தனை நாட்களாக நீங்கள் கண்ட கனவு, இந்த வருடத்தின் இறுதி நாளான இன்று நிறைவேறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. வெற்றிவாகை சூடும் நாள். லட்சியம் நிறைவேறும் நாள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று சுகபோக வாழ்வு இருக்கும். இந்த நாள் இனிய நாளாக அமையும். இந்த வருடம் முழுவதும் நடந்த நல்லது கெட்டதை நினைத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். கெடுதல் எல்லாம் உங்களை விட்டு கடந்து போகும். நன்மை எல்லாம் உங்களுடனே தொடர்ந்து பயணம் செய்ய, இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வோம்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். சுகமான நாளாக இருக்கும். புது வருடத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பீர்கள். எல்லா நல்ல விஷயங்களும் உங்களுக்காக அடுத்த வருடம் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நாள் இனிய நாளாக அமையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்வீர்கள். இரவு நல்ல தூக்கத்தை அடைவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சின்னதாக ஒரு மன பயம் இருக்கும். இந்த வருடம் முடியப்போகிறது. அடுத்த வருடம் ஆவது நமக்கு இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வருமா? என்ற சந்தேகம் இருக்கும். சந்தேகமே வேண்டாம். அடுத்த வருடம் உங்களுக்கு நல்ல வருடம் ஆகத்தான் பிறக்கும். இந்த நாள் இனிய நாளாக அமையும். கவலைகளை கைவிட்டு விடுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று யோசனை கொஞ்சம் அதிகமாக இருக்கும். அடுத்த வருடம் என்னவெல்லாம் செய்யலாம். இந்த வருடத்தில் இருந்த பிரச்சனைகளை அடுத்த வருடம் எப்படி சரி செய்யப் போகின்றோம், என்ற கவலைகளில் நீங்கள் கொஞ்சம் ஆழ்ந்திருப்பீர்கள். யோசனை செய்து செய்து வாழ்நாளை வீணடிக்காதீங்க. சந்தோஷமாக வரப்போகும் புத்தாண்டை வரவேற்போம். நல்லதே நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். இன்று மட்டுமல்ல, இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நடந்த நல்லதுக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். புது வருடத்தை சந்தோஷமாக வரவேற்க வேண்டும். அடுத்த வருடம் முழுவதும் நீங்கள் போட்டு வைத்திருக்கும் பிளான் எல்லாம் சக்ஸஸ் ஆக இறைவனை பிரார்த்திப்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நிம்மதி இருக்கும். இந்த வருடம் நடந்ததெல்லாம் நடந்ததாகவே இருக்கட்டும். வரப்போகும் புது வருடத்திலாவது, இருக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ, புது முயற்சிகளை மேற்கொள்ள உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். அயராது உழைத்தால் நிச்சயம் உங்களுக்கான வெற்றி உங்கள் கையை வந்து சேரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சின்ன சின்ன மன வருத்தம் இருக்கும். வரப்போகும் புத்தாண்டு நமக்கு நல்லது செய்யுமா என்ற சந்தேகமும், உங்களை கொஞ்சம் காயப்படுத்தும். கவலைப்படாதீங்க, இந்த வருடம் இனிய வருடமாகவே உங்களுக்கு பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணடிக்காதீங்க. கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பான்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஏகப்பட்ட நன்மைகள் நடக்கும். புது அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பிறக்கப் போகும் புத்தாண்டில் கவலைகள் இல்லாத சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தனலாபம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வருமானம் பெருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். உற்சாகமாக செயல்படுவீர்கள். வரப்போகும் புத்தாண்டு எதிர்கொண்டு குடும்பத்தோடு சந்தோஷமாக இந்த நாளை செலவு செய்ய போறீங்க. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சியாக இருக்கும். உற்சாகமாக இருக்கும். இந்த வருடத்தோடு பிரச்சனைகள் எல்லாம் முடிய வேண்டும் என்று இறைவனை மனமுருக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்கு வழிகாட்டியாக வருவார். முக்கோபத்தை விட்டு விடுங்கள். அதிகம் பேசாதீர்கள், நல்லதே நடக்கும்.
Tags:
Rasi Palan