இலங்கையில் சிக்குன்குனியா வைரஸ் (Chikungunya virus) வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, இங்கு பயணம் மேற்கொள்ளும் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) 'நிலை 2' (Level 2) பயணச் சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கைக்குச் செல்பவர்கள் "முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை" மேற்கொள்ளுமாறு அந்த எச்சரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2025 டிசம்பரில் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, இலங்கை ஏற்கனவே 'டிட்வா' (Ditwah) சூறாவளியின் பேரழிவிலிருந்து மீண்டு வரப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் வந்துள்ளது. இந்தச் சூறாவளியினால் நாட்டின் உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார சேவைகளும் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளன.
நுளம்புகளால் பரவும் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் தற்காத்துக் கொள்ளவும், தகுந்த மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags:
sri lanka news