யாழில் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக பலியான பெண்..!!!


யாழில் கிணற்றில் தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் அனலைதீவு பகுதியில் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய ஆளுகைக்குள் இருக்கும் அனலைதீவு, வட்டாரம் ஐந்தில் வசிக்கும் ஜஹா சுப்பையா நளினி என்பவரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் உயிரிழப்பு தொடர்பில் உறவினரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தொடரும் அசாதாரண வானிலையை தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மக்கள் பல்வேறு அவலங்களை சந்தித்துவரும் சூழ்நிலையில் நீர் நிலைகளும் நிரம்பி இருக்கின்ற நிலையில் இவ்வாறு ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here