மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிட வேண்டாம். கூடுமானவரை இன்று வீட்டு சாப்பாட்டை சாப்பிடுவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வருமானத்தை விட செலவை எக்காரணத்தைக் கொண்டும் அதிகப்படுத்தாதிங்க. சிக்கனம் தான் உங்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். வேலையிலும் வியாபாரத்திலும் மனதிருப்தி இருக்கும். சேமிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட தூர பயணங்கள் மன நிறைவாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று மேன்மையான நாளாக இருக்கும். வேலையை நேரத்திற்கு முடித்து விடுவீர்கள். நல்ல ஓய்வு எடுப்பீர்கள். சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு கிடைத்துவிடும். பெரிய பெரிய பிரச்சனைகள் வந்தாலும் கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் கவலைப்படாதீங்க.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று விவேகத்தோடு நடந்து கொள்வீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தடைகள் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் கவனம் செலுத்த வேண்டும். அதிகம் பேச வேண்டாம். முன் கோபம் வேண்டாம். பொறுமை மிக மிக அவசியம் தேவை.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். பெருசாக எந்த பிரச்சினையும் இல்லை. வேலையும் வியாபாரம் சரியாக நடக்கும். உங்களுடைய கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சுறுசுறுப்பு வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சாந்தமான அமைதியான நாளாக இருக்கும். பெருசாக எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கூடாத நட்பிலிருந்து விலகியே இருப்பது நல்லது. அதிக நேரம் கைப்பேசி பார்க்காதீங்க. நேரத்தை வீணடிக்காதீங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். அன்பு வெளிப்படும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்தித்து பேச வாய்ப்புகள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சோர்வு காணப்படும். நேரத்தை வீணடிக்காமல் இருந்தால் பிரச்சனை இல்லை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் துணிச்சலாக செயல்படுவீர்கள். உங்களுக்கு தேவையான விஷயங்களை போராடி பெற்றுக் கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய உதவியை நாட மாட்டீர்கள். இன்று கொஞ்சம் கர்வம் வெளிப்படும் நாளாகத்தான் இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நீங்கள் நினைத்த விஷயங்களை சாதித்து காட்டுவீர்கள். புது முயற்சிகள் வெற்றியைத் தரும். புது வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். மன நிறைவான நாள். கொஞ்சம் அசதி வரும் நாள்.
Tags:
Rasi Palan