இன்றைய ராசிபலன் - 06.01.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் தேடி வரும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமுகமான போக்கு நிலவும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை யாருக்கும் எந்த விஷயத்திலும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருக்க கூடிய சூழ்நிலை வரும். ஓய்வு எடுக்க வேண்டும் என்று மனது சொல்லும். ஆனால் வேலை பளுவோ அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கட்டாயம் கவனம் செலுத்துங்கள். உடல் உபாதைகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த நாள் மந்தமான சூழ்நிலை இருக்கும். வேலையையும் வியாபாரத்தையும் அனுசரித்து செல்லுங்கள்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத பாராட்டு கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வுக்காக நீங்கள் நடத்திய பேச்சு வார்த்தை வெற்றியை கொடுக்கும். முன்னேற்றம் நிறைந்த நாள். கலைஞர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வெளியூர் செல்ல வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு தேடி வரும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கசப்பான அனுபவங்கள் எல்லாம் சந்தோஷத்தை கொடுக்கும். இன்பமான நாளாக இருக்கும். மனதிருப்தியோடு இந்த நாளை துவங்குவீர்கள். வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். பிள்ளைகளைப் பற்றி உங்களுடைய கவலை நீங்கும்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். வேலையில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. வியாபாரத்தையும் கவனிக்க முடியாத சூழ்நிலை சில பேருக்கு வரலாம். இந்த நாளை கவனமாக எடுத்துச் செல்ல வேண்டும். அலைச்சல் வேண்டாம். நீண்ட தூர பயணத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மனக் குறைகளை எல்லாம் மனதிற்கு பிடித்தவர்களிடம் கொட்டித் தீர்ப்பீர்கள். மன பாரம் குறையும். இருந்தாலும் ஏதோ ஒரு கவலை உங்களை பயப்பட செய்து பார்க்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்த முடியாது. மனதை அலைபாய விடாதீங்க. எல்லாவற்றையும் இறைவன் கையில் ஒப்படைத்து விட்டு, கடமையை மட்டும் செய்யுங்கள்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வரா கடன் வசூல் ஆகும். கடன் சுமையிலிருந்தும் விடுபடுவீர்கள். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு இன்று பொன் பொருள் சேர்க்கை இருக்கும். மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தால் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புது முயற்சிகள் வெற்றியைத் தரும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் பெரிய அளவில் சக்சஸ் ஆகுவதற்கு நல்ல அமைப்புகள் இன்று கைகூடி வந்திருக்கிறது. நல்ல விஷயங்களை துவங்குங்கள். நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். பெரிய அளவில் வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தனலாபம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வீட்டில் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். தேவைக்கு ஏற்ப கையில் பணம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதுசாக சொத்து சுகம் வாங்குவதற்கும் நல்ல வாய்ப்புகள் இருக்கு.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். பெரியதாக எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வம்பு சண்டைகள் வந்தாலும் விலகி இருப்பீர்கள். இதனால் பெரிய அளவில் நன்மைகள் நடக்கும். கடமையில் கவனத்தோடு இருக்கவும். குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையை திருப்தியோடு செய்து முடிப்பீர்கள். நிதி நிலைமையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தேவைக்கு ஏற்ப கையில் பணம் இருக்கும். சொந்த பந்தங்களோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சியும் கிடைக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சந்தோஷம் இருக்கும். பேச்சு திறமை வெளிப்படும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். ஆனால் உடல் அசதி கொஞ்சம் வரும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க, ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுவது நல்லது.
Previous Post Next Post


Put your ad code here