இன்றைய ராசிபலன் - 09.01.2026..!!!

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நிம்மதியான இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். முடிந்தால் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். தெளிவான முடிவுகளை எடுத்து பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கட்டுவீர்கள். தேவையில்லாத சந்தேகம் நீங்கும். நம்பிக்கை வரும். குடும்ப ஒற்றுமை நிலவும். வேலையிலும் வியாபாரத்தையும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். நேரத்தை அனாவசியமாக வீணடிக்க கூடாது.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றியடையும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் சுப காரியம் தடைகள் விலகும். சுப நிகழ்ச்சிகள் துவங்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு பணம் கையை வந்து சேரும். பண்டிகையை கொண்டாட தேவையான பணம் கிடைத்து விடும். நீண்ட நாள் எதிர்பாராத ஆசைகள் இன்ற நிறைவேறும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவனமாக செயல்பட வேண்டும், மறதியால் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமான மீட்டிங்கு போறீங்கன்னா ஒரு லிஸ்ட் போட்டு, தேவையான விஷயங்களை எழுதி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. தாமதத்தாளும் பிரச்சனைகள் வரலாம். முக்கியமான வேலைகளுக்கு கிளம்பும்போது அரை மணி நேரம் முன்கூட்டியே கிளம்புவது நல்லது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்பதையும் கடவுள் உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பான். தக்க சமயத்தில் தக்க நபரிடம் இருந்து உதவிகளை பெறக்கூடிய நாளாக இருக்கும். நண்பர்கள், உறவுகளுடைய அருமை பெருமைகளை இன்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று திறமையாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் லாப நோக்கத்தோடு செயல்படுவீர்கள். எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் அளவிற்கு மன தைரியமும் இருக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கர்வமான நாளாக இருக்கும். பெருமையான நாளாக இருக்கும். கையில் எடுத்த விஷயங்களை எல்லாம் சரியான நேரத்தில் முடித்து காட்டுவீர்கள். வாக்கு தவற மாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு உங்கள் மீது இருக்கக்கூடிய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போகாமல் நடந்து கொள்வீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். நன்மைகள் பல நடக்கும். சிக்கல்கள் நீங்கும். வருமானம் பெருகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும். நீண்ட தூர பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நலமான வளமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நல்ல பெயர் எடுப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும். தேவையில்லாத நட்பு உங்களை விட்டு விலகும். தேவையில்லாத பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். இறைவனின் பரிபூரண அருளால் இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று பேராசையை குறைத்துக் கொள்ள வேண்டும். பொறாமையை குறைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களை பார்த்து எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் செய்யக்கூடாது. உங்களுக்கு என்ன பொருந்துமோ அதை மட்டும் நீங்கள் பற்றினால் போதும். நிதானதோடு செயல்பட வேண்டிய நாள் இன்று.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். என்ன செய்வது சிக்கலில் மாட்டிக் கொண்டோமே என்று யோசிக்கும் போதே, கடவுள் உங்களுக்கு நல்லதொரு வழியை காண்பித்துக் கொடுப்பான். மன நிம்மதி கிடைக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். எதிரி தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.
Previous Post Next Post


Put your ad code here