மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கையை மீறி செலவாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பொங்கலுக்கு பர்ச்சேஸ் செய்வதாக இருந்தால் கவனமாக இருக்கவும். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக இருக்கும். வாங்கிய கடனை நேரத்திற்கு திருப்பிக் கொடுத்து விட்டால் இன்றைய பிரச்சனையில் பாதி குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய பேச்சுக்கு சுற்றி இருப்பவர்களுடைய ஆதரவு கிடைக்கும். குடும்ப ஒற்றுமை இருக்கும். நிதி நிலைமை சீராகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள் இன்று.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும் நாள். ஆசை அதிகமாக இருக்கும். எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வேலை பளுவும் அதிகமாகத்தான் இருக்கும். நேரம் போவதே தெரியாது. கொஞ்சம் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். காலரை தூக்கிக்கொண்டு உங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை வெளிப்படையாக பேசலாம். மடியில் கனம் இல்லை. வழியில் பயம் இல்லை என்பது போல இந்த நாள் உங்களுக்கு தைரியத்தை வெளிப்படுத்தும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பாராத வரவு இருக்கும். பணத் தேவை பூர்த்தியாகும். குடும்பத்திற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சில பேருக்கு சொத்து சேர்க்கையும் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்துங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடை நீங்கும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வங்கி கடன் கிடைக்கும். நல்லது நடக்கும்.
- Advertisement -
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். எல்லா வேலையையும் சுறுசுறுப்பாக செய்வீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்துவீர்கள். நிதி நிலைமை மேலோங்கும் நாள். கடன் சுமை குறையும். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். கவனக்குறைவாக ஒரு வேலையையும் கையில் எடுக்கக்கூடாது. மனதை அலைபாய விடக்கூடாது. மனதை ஒருநிலைப்படுத்தி ஒரு வேலையை செய்தால் மட்டுமே அது சக்சஸ் ஆகும். இல்லையென்றால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஜாக்கிரதை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி இருக்கும். எதிலும் தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. பொங்கல் கொண்டாட குடும்பத்துடன் தயாராகி விடுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வசூல் ஆகாத கடன் கையை வந்து சேரும். பெரிய பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். முக்கியமான பண்டிகை வேலைகளை எல்லாம் முன்கூட்டியே முடித்துக் கொள்வது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். நேரத்திற்கு உங்களுடைய கடமைகளை செய்து முடிப்பீர்கள். பெற்றவர்களுடைய மனநிலையை புரிந்து நடந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். முன்கோபம் கூடாது. அதிகம் பேசக்கூடாது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை கை நழுவி விட வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக செயல்படுங்கள். யோசிக்காமல் புது முடிவுகளை எடுக்க வேண்டாம். இறைவழிபாடு செய்வது நல்லது கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது.
Tags:
Rasi Palan