இன்றைய ராசிபலன் - 17.01.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். உடல் உபாதைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. வீண் விரைய செலவுகள் கொஞ்சம் வரலாம். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் மந்தமான சூழல் உண்டாகும். கவலை கொள்ள வேண்டாம் எல்லாம் சரியாகிவிடும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பொறுமையான நாளாக இருக்கும். அன்பு பாசம் வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சில பேருக்கு சொந்த ஊரிலிருந்து அலுவலகப் பணிக்கு திரும்ப அவசியம் ஏற்படும் வேலைகள் பிஸியாக தொடரும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நல்லது நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும். நீண்ட தூர பயணங்கள் இனிதே அமையும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். சில பேருக்கு வெளியூர் பயணங்கள் நல்லபடியாக அமையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்து இடர்பாடுகள் நீங்கும்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற டென்ஷன் வர வாய்ப்பு உள்ளது. முன்கோபம் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். வாக்குவாதம் சண்டை வரவும் வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். இறை வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுங்கள். நல்லதே நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனம் நிறைவு இருக்கும். திருப்தியாக உங்களுடைய கடமைகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். கொஞ்சம் வீண் விரைய செலவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கடன் வாங்குவதை குறைப்பது நல்லது.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். புது வேலை துவங்குவதில் நிறைய அக்கறை காட்டுவீர்கள். புதிய முயற்சிகள் எல்லாம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பயணங்கள் இனிதே நிறைவடையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். நிறைய பழைய கதைகளை பேசி நேரத்தை செலவு செய்தீர்கள். இந்த நாள் உங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கப் போகிறது.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடுவதில் கூடுதல் அக்கறை காட்டலாம். புது தொழில் துவக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். முன்னேற்றம் நிறைந்த நாளாக அமையும். புதிய நண்பர்களின் சந்திப்பு நிறைய நல்ல அனுபவங்களை கொடுக்கும். மனக்கசப்பு விலகும் நாள் என்று.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். சொத்துபத்து பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பண்டிகையை இனிதே கொண்டாடி மீண்டும் உங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தயாராகுவீர்கள். நல்லது நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகம் வெளிப்படும். சுறுசுறுப்பு இருக்கும். தேவையில்லாத பண பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களை மட்டும் கூடுமானவரை தவிர்த்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களை செல்லும்போது கவனம் தேவை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதி இருக்கும். நீங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பீர்கள். இதனால் எதிரி தொல்லை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். வேகத்தோடு சேர்ந்த விவேகம் உங்களை வாழ்க்கையில் முன்னேற்றி விடும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
Previous Post Next Post


Put your ad code here