இன்றைய ராசிபலன் - 18.01.2026..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் கொஞ்சம் இருக்கும். பதட்டமாகவே எல்லா வேலைகளையும் செய்வீர்கள். முக்கியமான வேலைகளை முன்கூட்டியே துவங்குங்கள். முக்கியமான இடத்திற்கு செல்வதாக இருந்தால், காலதாமதமாக செல்ல வேண்டாம். கவனமாக செயல்படுங்கள். சுறுசுறுப்பாக செயல்படுங்கள். அதே சமயம் முடிந்தவரை பதட்டத்தை குறைத்துக் கொள்வது ரொம்பவும் நல்லது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகக் கூடிய நாளாக இருக்கும். ஏதோ ஒரு வகையில் பணம் வந்து பாக்கெட்டை நிரப்பி வைக்கும். சந்தோஷம் நிறைவாக இருக்கும். பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பக்கூடிய நேரம் காலம் வந்துவிட்டது. ஓய்வு எடுத்ததெல்லாம் போதும். சுறுசுறுப்பாக கடமையில் கண்ணும் கருத்தோடு செயல்படவும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறவுகளோடு நெருக்கம் அதிகரிக்கும். மனதிற்கு ரொம்பவும் பிடித்த உறவுகளை விட்டு பிரிந்து, வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு வரும். சின்ன மன கசப்பு வந்தாலும் அது உங்களுக்கு இனிமையான அனுபவத்தை கொடுக்கும். உறவுகளின் பலம் அதிகரிக்கும் நாள் இன்று.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதிற்கு பிடித்த நபரோடு கொஞ்ச நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் உபாதைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று செலவுகளை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். வரவுக்கு ஏற்ற செலவு நன்மையை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்துங்கள். அடுத்தவர்களுடைய பேச்சை கண்மூடித்தனமாக கேட்க வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாளாக இருந்தாலும் சில கடமைகள் உங்களைப் பின் தொடரும். பண்டிகை எல்லாம் நிறைவடைந்து விட்டது. கடமைகளை துவங்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் இனிதே நிறைவடையும் நல்லது நடக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள். நேர்மையாக செயல்படுவீர்கள். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். நேர்மையின் காரணமாக சில பல எதிரிகள் உருவாகக்கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு தலைக்கு மேல் வேலை பளு இருக்கும். எந்த வேலையை செய்வது, எந்த வேலையை விடுவது என்று தெரியாது. விடுமுறை நாட்களுக்கு உண்டான மொத்த வேலையும் உங்களுக்காக காத்து கிடக்கும். தேவையற்ற பயம் மனதில் எழும். பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்ற குழப்பம் உண்டாகும். கவலையே படாதீங்க இறைவழிபாடு செய்து விட்டு உங்களுடைய வேலையை துவங்குங்கள் நல்லதே நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய முதலீடுகளுக்கு உண்டான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். மற்றபடி வேலையில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. விடுமுறை நாள் இன்று. உங்களுக்கு உண்டான ஓய்வும் கிடைக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். பஸ், ட்ரெயின் ஏதாவது புக் பண்ணி வச்சிருந்தீங்கன்னா, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னாடியே ஸ்டேஷனுக்கு போயிடுங்க. தாமதத்தால் சில பல பிரச்சனைகள் வரலாம். முக்கியமான பொருட்களை பத்திரமாக எடுத்து வைக்கவும். தேவையில்லாமல் பேசி நேரத்தை வீணடிக்காக் கூடாது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை கொஞ்சம் இருக்கும். ஏதோ ஒரு பிரச்சனை மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். வேலை வியாபாரம் என்று உங்களுடைய சிந்தனை பல வகையில் உங்களை தூங்கவிடாமல் செய்யும். கவனத்தோடு செயல்படுங்கள். பிரச்சனையை உணர்ந்து அதற்கு உண்டான தீர்வை தேடுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுக போக வாழ்க்கை தான். விடுமுறை நாள் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. இனி வேலையை துவங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும், நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று உங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழப் போகிறீர்கள். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். இந்த நாள் இனிய நாளாக அமையும்.
Previous Post Next Post


Put your ad code here