இன்றைய ராசிபலன் - 19.01.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிமையாக துவங்கும். அமைதியான நாளாக இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் அந்தந்த நேரத்திற்கு சரியாக நடக்கும். விடுமுறை நாட்கள் கழித்து உங்களுடைய கடமையை துவங்கியிருப்பீர்கள். இறை வழிபாடு செய்துவிட்டு கவனத்தை சிதறவிடாமல் இந்த நாளை எடுத்துச் செல்லுங்கள். நல்லதே நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் பல கைக்கூடி வரும் நாளாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எல்லாம் மீண்டும் நடக்க துவங்கும். விடுமுறை நாட்கள் கழித்து உங்களுடைய கடமைகளை சரிவர துவங்கியிருப்பீர்கள். உற்சாகத்தில் ஒரு துளி கூட குறைவிருக்காது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நல்லதே நடக்கும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குதூகலமாக உங்களுடைய அலுவலக வேலையையும் வியாபாரத்தையும் துவங்குவீர்கள். தை ஒன்று பிறந்த பிறகு கடமைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் மேற்கொண்ட கனவு நினைவாக போகும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். சுறுசுறுப்பு வெளிப்படும் நாள். இன்று நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும் நிதிநிலைமை சீராகும்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மேன்மையாக நடந்து கொள்வீர்கள். யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன ஏற்ற தாழ்வு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எல்லாவற்றையும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டு, எந்தவித சலனமும் இல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தனலாபம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக வராத பணம் உங்கள் கையை வந்து சேரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்கவும் வாய்ப்புகள் உள்ளது. கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். நீண்ட நாள் கஷ்டங்கள் உங்களை விட்டு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் மட்டும் கொஞ்சம் நிதானமாக செயல்பட வேண்டும். அவசர முடிவு எடுக்க வேண்டாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன மனக்கவலை இருக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்களை விட்டுவிட்டு விலகி இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும் கடமையிலிருந்து தவறக்கூடாது அல்லவா. மன சஞ்சலத்தை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, கடமையில் கவனத்தோடு செயல்படுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் பதட்டம் இருக்கும். வேலைகளை எப்படி சமாளிப்பது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து பணிக்கு திரும்புவதற்கு கொஞ்சம் கால தாமதம் எடுக்கலாம். சில பேருக்கு பயணங்களால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த நாள் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சேமிப்பு கரைவதற்கு வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாரிடம் ஆவது ஏமாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை வியாபாரம் எல்லாம் சுறுசுறுப்பாக துவங்கும். அடக்கம் வெளிப்படும். பணிவு வெளிப்படும். எல்லா இடத்திலும் கொஞ்சம் அமைதியாக அனுசரித்து தான் நடந்து கொள்வீர்கள். பெருசாக ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நாள் இன்று.
Previous Post Next Post


Put your ad code here