மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான சௌகரியமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லி விடுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். பாராட்டும் புகழும் உங்களைத் தேடி வரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீங்கள் எதிர்பார்க்காத நிறைய நல்ல விஷயங்கள் உங்களை சந்தோஷப்படுத்த போகிறது. மனதிற்கு பிடித்த நபரோடு நேரத்தை செலவு செய்வீர்கள். இனிமையான அனுபவங்கள் கிடைக்கும் நாள் இன்று.
- Advertisement -
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் மனதில் இருந்த, நல்ல ஆசைகளை நீங்கள் நிறைவேற்றிக் கொள்வீர்கள். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். காதல் வெளிப்படும். அன்பு வெளிப்படும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்போடு செயல்பட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் வருவதற்கு காத்துக் கொண்டிருக்கிறது. ப்ரோமோஷன் கிடைக்கலாம். சம்பள உயர்வு கிடைக்கலாம். இதுவரை உங்கள் வாழ்க்கையில் நடக்காத நிறைய நல்ல விஷயங்கள் இன்று உங்கள் வாசல் கதவை தட்டும். நல்லதே நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
- Advertisement -
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆடம்பரமான வாழ்க்கையை இன்று வாழ கூடாது. நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால், பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்று.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மேன்மை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சரிவர செய்வீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனையில் தலையிட மாட்டீர்கள். சண்டை சச்சரவுகள் வந்தாலும் அதில் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பீர்கள். உங்களுடைய பிரச்சனையை நீங்கள் மிகவும் லேசாக எடுத்துக் கொள்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள் இன்று.
- Advertisement -
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பான நாள். ஆர்வம் அதிகரிக்கும் நாள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக்கொள்வீர்கள். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். உற்சாகம் நிறைந்த இந்த நாளில் உங்களால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் டென்ஷன் இருக்கும். சோதனைகளை கொடுக்கக்கூடிய நாளாக தான் இருக்கும். ஆனால் உங்களுடைய பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை கடவுள் உடனடியாக கொடுத்து விடுவார், உறவுகளுடைய முக்கியத்துவம், நண்பர்களுடைய முக்கியத்துவத்தை சரியாக இன்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள். தக்க சமயத்தில் உதவி கிடைக்கும் நாள் இன்று.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் நீங்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதி வெளிப்படும் நாளாக இருக்கும். தெளிவாக சிந்திப்பீர்கள். தைரியமாக பேசுவீர்கள். எதிரிகளை கண்டு பயப்பட மாட்டீர்கள். எல்லோரையும் ஒரு கை பார்த்து விடுவீர்கள். பிரச்சனைகளை கண்டு அஞ்சி பயந்து ஒதுங்கிய காலம் மறைந்து, உங்களை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது. துணிந்து செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். தேவையில்லாத விஷயங்களை விட்டு விலகி இருப்பீர்கள். எதிரிகள் தொல்லை நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் இருக்கும். தீமைகளை மறந்து விட்டு நிறைய நன்மைகளை தேடி மனம் பயணம் செய்யும். நிறைய பக்குவமும் அனுபவம் கிடைக்கும் நாள் இன்று.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று அன்றாட வேளையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை நல்ல காரியங்களை நாளை தள்ளி போடுங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். மனதை ஒரு நிலையோடு வைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
Tags:
Rasi Palan