இன்றைய ராசிபலன் - 24.01.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். எதிரிகளால் தொல்லை வரும். உங்களுடைய பேச்சில் நிதானம் இருக்காது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கொஞ்சம் தாமதமாக நடக்கும். இந்த நாளில் வரக்கூடிய சிரமங்களை பொறுமையோடு எதிர் கொண்டால் பிரச்சனைகள் இல்லை. முன்கோபம் வேண்டாம். இன்று அவசரம் வேண்டாம் கவனமாக இருங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் நேரத்திற்கு சரியாக நடக்கும். பெரிய பெரிய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதற்கு நேரம் காலம் கூடி இருக்கிறது. வரும் வாய்ப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். கூடுமானவரை முயற்சி போடுங்கள். உங்களுக்கான நல்லது இன்று நிச்சயம் நடக்கும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இருக்கும். உற்சாகம் இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்தித்து பூரிப்படைவீர்கள். பல நாள் கதைகளை உட்கார்ந்து பேசுவீங்க. இன்று நேரம் போவதே தெரியாது. ஆனால் கடமையிலிருந்து தவறாமல் இருக்க வேண்டும் அல்லவா. வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் கவனத்தோடு செயல்படுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகம் பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். உங்களுக்கான நல்லது உங்கள் வீடு தேடி வரும். புரிதல் இல்லாத கணவன் மனைவி இடத்தில் நல்ல புரிதல் உண்டாகும். ஈகோ பிரச்சனைகள் விலகும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றிவாகை சூடுபீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். கடன் சுமை விலகும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனதிருப்தி ஏற்படக்கூடிய நாள் இன்று.

கன்னி


கன்னி ராசி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நிறைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சேமிப்பு இரட்டிப்பாகும் நாள். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். உங்கள் பெயரை காப்பாற்றிக் கொள்வீர்கள்.



துலாம்


துலாம் ராசி காரர்களுக்கு இன்று இன்பமான அனுபவம் கிடைக்கும் நாளாக இருக்கும். சந்தோஷம் பாசம் அன்பு காதல் என்று, இன்று உங்களுடைய வாழ்க்கை ஒரு ரோஜா பூ போல இனிமையாக இருக்கும். மனக்கசப்பு நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சந்தோஷம் இருக்கும். உற்சாகம் இருக்கும். அதே சமயம் பணிவோடு நடந்து கொள்வீர்கள். எந்த விஷயத்திலும் அலட்சியமாக செயல்பட மாறிட்டீர்கள். அடுத்தவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வீர்கள். தலைகனம் குறையும் நாள் இன்று.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அன்பு பாசம் சந்தோஷம் என்று குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்க கூடிய நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலக்கி நல்ல முன்னேற்றம் காணப்படும் வருமானம் சீராகும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான, சோர்வான நாளாக தான் இருக்கும். வேலையில் சின்ன பின்னடைவு வரலாம். சில இடங்களில் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை கூட வரும். கவனமாக செயல்படுங்கள். மனதை தைரியத்தோடு வைத்துக் கொள்ளுங்கள். எந்த இடத்திலும் மன உளைச்சலுக்கு ஆளாக கூடாது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்கள் இறை வழிபாடு செய்த மனதிருப்தி அடைவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிரி தொல்லை நீங்கும். நிம்மதி கிடைக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கோபம் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத டென்ஷன் வரும். உயரதிகாரிகளின் பிரஷர் இருக்கும். இந்த நாளில் கவனமாக செயல்பட வேண்டும். அதிகம் பேசாதீங்க, முன் கோபப்படாதீங்க. மனதை ஒருநிலைப்படுத்தி செயல்படுங்கள்.
Previous Post Next Post


Put your ad code here