மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுக போக வாழ்க்கை தான். வேலையும் வியாபாரமும் சமூகமாக செல்லும். நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களுக்கு வரவேற்பு கிடைக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். எதிர்பாராத நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று கை நிறையில் லாபம் கிடைக்கும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் ஏதாவது புது முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றால், இன்றைய நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்ததை விட நீங்கள் நிறைய நல்லதை அடைய முடியும். இறைவழிபாடு செய்யலாம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யலாம். சேமிப்பை உயர்த்தலாம் இதுபோல நல்ல விஷயங்கள் செய்ய இந்த நாள் உதவியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன நிறைவான நாளாக இருக்கும். செய்யும் வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வாரா கடன் வசூல் ஆகும். நீங்கள் அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். கொஞ்சம் உடல் சோர்வு இருந்தாலும், முயற்சிகளை கைவிடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யும் போது நிச்சயமாக உங்களுடைய தோல்விகள் வெற்றி படிகளாக மாறும். பிரச்சனைகளை கண்டு துவண்டு போகாமல் தைரியத்தோடு எதிர்கொள்பவர்களுக்கு இன்று நிச்சயம் சக்சஸ் உண்டு.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்ற சுறுசுறுப்பு தேவை. தாமதத்தால் சில பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பஸ் புக் பண்ணி இருந்தால், டிரெயின் புக் பண்ணி இருந்தால், குறித்த நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும். மீட்டிங் போக வேண்டும் என்றால் குறித்த நேரத்திற்கு முன்கூட்டியே தயாராகுங்கள் நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல செய்தி உண்டு. நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். தொலைபேசியின் மூலமாகவோ நண்பர்கள் மூலமாகவோ நல்ல செய்தி செவிகளில் விழும். மனதிருப்தி உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள்.
மனசுக்கு பிடித்த நபரோடு நீண்ட நேரம் செலவு செய்வீர்கள். உங்கள் காதல் வெளிப்படக்கூடிய நாள். இன்று காதல் கைகூடும் நாள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் உண்டாகும். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மேன்மையாக நடந்து கொள்வீர்கள். உங்களால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்வீர்கள். ஒரு நிமிடம் கூட அடுத்தவர்களுக்கு பிரச்சனையாகவோ, அடுத்தவர்களுக்கு துன்பம் தரக்கூடிய வகையிலும் சிந்திக்க கூட மாட்டீர்கள். இன்று மனது முழுவதும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட சிந்தனை இருக்கும். நிம்மதி கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கவலைகள் இருக்கக்கூடிய நாளாக அமையும். ஆனால் கவலையை ஒதுக்கி வைத்து விட்டு, முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும். என்னால் முடியாது, எனக்கு இது தெரியாது என்று, எந்த விஷயத்தையும் சொல்லக்கூடாது. என்னால் முடியும். முயற்சி செய்கிறேன், என்று கடின உழைப்பை முதலீடாக போட்டுப் பாருங்கள். இந்த நாள் நிச்சயம் கவலைகள் மறக்கும் நாளாக அமைந்துவிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி இருக்கும். காசு பணம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நிம்மதியை இழந்தவர்களுக்கு தான் தெரியும். அதனுடைய வலிமை என்ன என்பது, அதை நீங்கள் என்று உணர்வீர்கள். இறை வழிபாடு செய்யுங்கள். பழையதை எண்ணி வருத்தப்படாதீர்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியான நாளாக இருக்கும். ஏன் தான் இத்தனை கோவப்பட்டோமோ என்று உங்களை எண்ணி நீங்களே வருத்தப்பட்டு கொள்வீர்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பீர்கள். சிந்தித்து செயல்படுங்கள். சிந்தனையை சிதற விடாதீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஆதரவு கிடைக்கும். உங்களுடைய வேலையில் மனதிருப்தி இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். நீங்கள் போட்ட கடின உழைப்புக்கு எல்லாம் நல்ல பலன் உண்டு. கவலை படாதீங்க. அதிக நேரம் கைபேசி பார்க்காதீங்க. நேரத்திற்கு தூங்குங்கள். ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது நல்லது.
Tags:
Rasi Palan