இன்றைய ராசிபலன் - 28.01.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வரா கடன் வசூல் ஆகும். லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். கூடுமானவரை ஆடம்பர வாழ்க்கையை தவிர்ப்பது நல்லது. செலவுகளை கட்டுப்படுத்தவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தை அதிகமாக வெளி ஆட்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மன பயம் இருக்கும். ஒரு பதட்டம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க வேண்டாம். புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடந்து கொள்வது நல்லது. இளைஞர்கள் மாணவர்கள் என்று கவனத்தோடு செயல்பட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் எப்பவும் போல இருக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். பாராட்டு பெயர் புகழ் அந்தஸ்து உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பு வெளிப்படும் நாள். நேரத்தை அனாவசியமாக செலவு செய்ய மாட்டீங்க. அவசியத்தை புரிந்து வேலைகளை முடித்து விடுவீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். சில பொருட்கள் திருட்டுப் போக வாய்ப்பு உள்ளது. உறவுகளோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளோடு பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. முன்கோபம் வேண்டாம். அவசர முடிவால் சில பல நல்ல விஷயங்களை இழக்க வாய்ப்புகள் உள்ளது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இறக்க குணம் வெளிப்படும். உங்களுடைய எதிரிகளை மனநிறைவோடு மன்னித்து விடுவீர்கள். பிரச்சனையில் இருந்து சுலபமாக விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்து டென்ஷன் குறையும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபரோடு நேரத்தை செலவு செய்து சந்தோஷம் அடைவீர்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெளியூர் பயணங்கள் நல்லபடியாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை குறையும். குடும்பத்தோடு இந்த நாளை மகிழ்ச்சியாக கடந்து செல்வீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கும். விருந்தாளிகளின் வருகையால் சுப செலவுகள் ஏற்படும். மன நிறைவான இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். முன்கோபம் வேண்டாம். அவசர முடிவு வேண்டாம். வார்த்தையில் கவனம் இருக்கட்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கான தீர்வை நாளை தேடுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. இந்த நாள் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். ஆசைகள் நிறைவேறும் நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த நல்ல காரியங்கள் இன்று நடக்கும். உங்கள் மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செலவுகள் இருக்கும். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும் இந்த நாள் இனிய நாள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இந்த சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வந்து போகும். பிரச்சனைகளை கண்டு நீங்கள் பயப்படக்கூடாது. உங்களுடைய கடமைகளை தவறாமல் செய்து விடுங்கள். நேரத்தை வீணடிக்காதீங்க. பொய் சொல்லாதீங்க. நேர்வழியில் இருந்து குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்காதிங்க. கடவுள் உங்களுக்கான நல்லதை கொடுப்பான்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு பாசம் காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த சிக்கல் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் பயணங்கள். பயணங்கள் நல்லபடியாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது உங்களை தேடி வரும்.
Previous Post Next Post


Put your ad code here