கிளிநொச்சி – பளை நகர்ப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்தில் பளை சோரன்பற்று – மாசாரை சேர்ந்த குமாரசாமி செல்வவாணி (வயது-63) என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முற்பகல் 11.45 மணியளவில் பளை நகரிலுள்ள பிரதேச செயலகத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரை, டிப்பர் வாகனம் மோதியது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் டிப்பர் சாரதியான 33 வயதான நபரை பளை பொலிஸார் கைது செய்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டனர்.
Tags:
sri lanka news
