இன்றைய ராசிபலன் - 12.02.2026..!!!

மேஷம்


மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சந்தோஷமாக உங்களுடைய வேலைகளை செய்வீர்கள். இதுநாள் வரை உங்கள் மனதை குழப்பிக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் கூட, தெளிவு பெறும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசி காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டங்கள், பாராட்டுகள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் விலகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். குடும்ப பிரச்சனைகள் நீங்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். மாமியார் மருமகள் உறவுகள் பலப்படும். இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.


ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். திறமை அதிகரிக்கும் நாள். உங்களை நீங்கள் நிரூபிக்க கூடிய நாள், என்று கூட சொல்லலாம். எந்த இடத்தில் எல்லாம் அவமானப்பட்டு தலை குனிந்து நின்றீர்களோ, அந்த இடத்தில் எல்லாம் இன்று தலைநிமிர்ந்து நிற்கக் கூடிய வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமாக இருப்பீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். தெளிவாக பேசுவீர்கள், அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். சோம்பேறித்தனம் விலகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் கிடைக்கும் நாள். நிதிநிலைமை சீர்படும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

- Advertisement -

கடகம்


கடக ராசி காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தைரியமாக இருப்பீர்கள். ஒரு வாய்ப்பை கை நழுவ விட்டால், இன்னொரு வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்பதில் ஒரு துளி கூட நம்பிக்கை குறையாது. குறையாத நம்பிக்கை உங்களை வாழ்வாங்கு வாழ வைக்கும். மனது உறுதியோடு செயல்பட்டு இந்த நாளை இனிமையான நாளாக மாற்றிக் கொள்வீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருந்து உங்களுடைய வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். ஆனால் உங்களுடைய அக்கறை ஆர்வம் மட்டும் எந்த விஷயத்திலும் குறையாது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் உங்களுடைய கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். இந்த நாள் இறுதியில் மனதிருப்தி கிடைக்கும்.

- Advertisement -

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். நினைத்த வேலைகள் எல்லாம் சரியாக நடக்கும். புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் வண்டி வாகனங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள் இன்று.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிம்மதி இருக்கும். பிரச்சனைகள் எல்லாம் மறக்கும். புது உலகத்திற்குள் உங்களை நீங்களே கூட்டிச் செல்வீர்கள். பிடித்த நபரோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். இந்த நாள் இனிமையான நாளாக அமைந்ததால், கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, யாரேனும் ஒருவருக்கு இயலாதவருக்கு உங்கள் கையால் உதவி செய்யுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். இதனால் சின்ன சின்ன ஏமாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பை முதலீடாக போடுங்கள். பெருசாக எந்த விஷயத்தையும் எதிர்பார்க்காதீங்க. உங்களுக்கான நல்லதை, கடவுள் நிச்சயம் கொண்டு வந்து உங்கள் கையில் சேர்ப்பான். பேராசை வேண்டாம், இன்று எல்லோர் சொல்வதையும் அப்படியே முழுசாக நம்ப வேண்டாம். கவனம் தேவை.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் இருக்கும். வெற்றி இருக்கும். தேர்ச்சி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள் வெளிநாட்டிற்கு படிக்கச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கெல்லாம் நல்ல வாய்ப்புகள் அமையும். இது ஒரு வகையில் பிரம்மாண்ட வளர்ச்சியை இன்று நீங்கள் காண்பீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். மூன்றாவது நபரை முழுசாக நம்ப கூடாது. முன்பின் தெரியாதவர்களுடைய பேச்சைக் கேட்டு அகல கால் வைக்காதீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். பேராசை வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். செய்யும் வேலையில் கவனம் இருந்தாலே போதும். இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனதில் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடும். இன்பமான இந்த நாளில் நீங்கள் துவங்கும் நல்ல காரியங்கள் எல்லாம் வெற்றியடையும். இறைவழிபாடு செய்யுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஆசைகள் தலைதூக்கும். நிறைய செலவு செய்யக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் உண்டாகும். எது சரி, எது தவறு என்று யோசிப்பதற்குள் சில விஷயங்களை அவசரமாக செய்து முடித்து விடுவீர்கள். இதனால் பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆசைகளை குறைத்துக் கொள்ளுங்கள். இன்று அவசியமான விஷயங்களை மட்டும் சிந்திப்பது நல்லது.
Previous Post Next Post


Put your ad code here