இன்றைய ராசிபலன் - 13.02.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்காமல் இருப்பீர்கள். கொடுத்த வேலைகளை எல்லாம் குறித்த நேரத்திற்கு முடித்துக் கொடுத்து நல்ல பெயர் வாங்குவீர்கள். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். குடும்ப ஒற்றுமை நிலவும் நாள் இன்று.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீண்விரய செலவுகள் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகி முன்னேற்றம் வரும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்னதாக மனக்கவலை இருக்கும். சிந்தனை அதிகரிக்கும். யோசித்துக் கொண்டே, கடமைகளை கைநழுவ விட வாய்ப்புகள் உள்ளது. கவலையை விட்டு விடுங்கள். கடமையில் கண்ணும் கருத்துடன் நடந்து கொண்டாலே போதும். இன்றைக்கான நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இதுநாள் வரை பட்ட கஷ்டத்திற்கு ஒரு பலன் இன்று கிடைக்கப் போகிறது. எதிர்பாராத அளவுக்கு நன்மைகள் நடக்கும். நீங்க சாதனை படைக்க போறீங்க. இன்று நடக்கும் சில விஷயங்களை உங்களாலயே நம்ப முடியாது. ஆனால் உங்களுக்கான நல்லது இன்று நிச்சயம் நடக்கும். தன்னம்பிக்கை தைரியம் உங்களை நல்வழிப்படுத்தும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று நிதானத்தை கையாள வேண்டும். அவசரம் வேண்டாம். கோபம் வேண்டாம். தேவை இல்லாத பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நிதானத்தை இழந்தால் இந்த நாள் நிம்மதியை இழக்க கூடிய நாளாக அமைந்துவிடும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வேலை வியாபாரம் குடும்பம் மனைவி குழந்தை என்று அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கணும். உங்களுக்கு பிடித்தது தான் நடக்கணும்னு யோசிக்க கூடாது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரையில் கவனமாக செயல்பட வேண்டும். கவனக்குறைவு வேண்டாம். ஆர்வமில்லை என்றால் ஒரு வேலையை கையில் எடுக்காதீர்கள். சும்மாவே இருந்தாலும் இன்று தவறு கிடையாது. ஆனால் அரைகுறை மனதோடு ஒரு வேலையை கையில் எடுக்கக் கூடாது.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரமோஷனுக்கு, சம்பள உயர்வுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது வேலைகளை எல்லாம் துவங்காதீர்கள். இருக்கும் வேலையை மட்டும் கவனத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடித்து ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிடவும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் தேவை. மூன்றாவது மனிதரை முழுசாக நம்ப வேண்டாம். இன்று புது முயற்சிகளை செய்யாதீங்க. இறை வழிபாடு செய்யுங்கள். மனதிற்கு அமைதி கிடைக்கும் அவசரம் இல்லாமல் இந்த நாள் நிதானமாகவே செயல்படலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். சோம்பேறித்தனம் வேண்டாம். எல்லா வேலைகளையும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே முடித்துவிட்டால் இன்றைக்கு நீங்கள் ஜெயித்து விடுவீர்கள். இறை வழிபாடு செய்யுங்கள். மனதை அலைபாய விடாதீர்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தைரியமாக பேசுவீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை பேசி சரி செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த விரிசல் சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் திறமை வெளிப்படும் நாள் இன்று.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் யோகம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் இருக்கும். புது வியாபாரம் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களை போடக்கூடிய வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். நல்லது நடக்கும்.
Previous Post Next Post


Put your ad code here