மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்று. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. இறை வழிபாடு செய்யுங்கள். குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை சிந்தித்து செயல்படுத்துவீர்கள். உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். பிள்ளைகளோடு நேரத்தை செலவு செய்து மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளோடு இருந்து வந்த வாக்குவாதம் மனக்கசப்பு நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் நல்லது நடக்கும் நாள் இன்று. உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூலாகும். நிதிநிலைமை மேலோங்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு உண்டான யோகம் இருக்கிறது. சொத்து சேர்க்கைக்கு உண்டாயோகம் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு செயல்பட வேண்டும். முன்கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். நல்லது நிச்சயம் நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சோம்பேறித்தனம் இருக்கும். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நிதானத்தோடு உங்கள் வேலையை செய்ய வேண்டும். எதிலும் அவசரம் கூடாது. கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. புது முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். மன நிறைவான நாள் இன்று. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். புதிய தொழில் தொடங்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய மனிதர்களின் நட்பு உங்களை நல்வழிப்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். செல்லும் இடமெல்லாம் நல்ல வரவேற்பு மரியாதை கிடைக்கும். எந்த இடத்தில் எல்லாம் உங்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டது. அந்த இடத்தில் எல்லாம் மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களுடைய தகுதியை நீங்களே உயர்த்திக் கொள்ள பாடுபட்டதற்கு பலன் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன வருத்தம் வரக்கூடிய நாளாக இருக்கும். பிரச்சனைகளை கண்டு துவண்டு போகக்கூடாது. சோகத்தில் உங்களை நீங்களே மூழ்கடித்துக் கொள்ள வேண்டாம். பிரச்சனையில் இருந்து வெளிவர வேண்டும். தைரியத்தோடு செயல்பட வேண்டும். நேர் வழியில் நடப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. எக்காரணத்தைக் கொண்டும் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. இறைவழிபாடு செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசி காரர்களுக்கு இன்று மனம் தெளிவடையும் நாளாக இருக்கும். குழப்பங்களில் இருந்து வெளி வருவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பல நாள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். கடன் சுமை நீங்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமை வெளிப்படும் நாள். சுறுசுறுப்பு இருக்கும் நாள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். குடும்ப உறவுகளோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு. வீட்டில் சுப காரிய தடைகள் விலகும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் இருக்கக்கூடிய நாளாக அமையும். நிதானதோடு செயல்பட வேண்டும். முன் கோபம் வேண்டாம். முன்னோர்கள் வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். சொந்த பந்தங்களோடு உடன் பிறந்தவர்களோடு கவனமாக பேசி பழகுவது நல்லது.
Tags:
Rasi Palan