மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. அதிகமாக பேசாதீங்க. உங்களுக்கு நடக்கக்கூடிய நல்லதை வெளிப்படையாக யாரிடமும் சொல்லாமல் இருப்பது நல்லது. இன்று கொஞ்சம் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இறைவழிபாடு செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று கோபத்தை குறைக்க வேண்டும். அவசரம் வேண்டாம். அதிகம் பேச வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் போதும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. பொய் சொல்லக்கூடாது. குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க கூடாது. நேர்மையாக நடக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். முதலீட்டிற்கு தேவையான பணம் சரியான நேரத்தில் வந்து சேரும். வேலையில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் கூட சரியாகும். பிரமோஷன் கிடைக்கவும், சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். இதுநாள் வரை நீங்கள் முட்டி மோதி போராடி முயற்சி செய்த விஷயங்கள் எல்லாம் இன்று நல்லபடியாக ஒரு வெற்றியை கொடுக்கும். மன அமைதி கிடைக்கும். பல நாள் உழைப்புக்கு பலனை அனுபவிப்பீர்கள். சந்தோஷமாக இருப்பீர்கள். இறை வழிபாடு வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவு கொடுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்வுதான். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல பண வரவு என்று இன்று ராஜ வாழ்க்கை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை நிலவும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்திலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். கட்டுமான தொழில் சீராக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் இனிமையாக அமையும். மனதிற்கு பிடித்த நபரோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சந்தோஷம் அதிகரிக்கும் நாள் இன்று.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களை பொதுப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் நினைத்ததை விட பல மடங்கு முன்னேற்றம் உங்கள் வாழ்க்கையில் வரும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். தலைகனம் அதிகரிக்கக் கூடாது. எல்லா இடத்திலும் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அதிகப்படியான சிந்தனை இருக்கும். யோசனை யோசனை என்று பாதி நேரம் போனதே தெரியாது. நேரத்தை வீணடிக்க கூடாது. வேலையில் கவனம் இருக்க வேண்டும். பேசுவதை குறைக்க வேண்டும். கணவன் மனைவி வாக்குவாதம் வேண்டாம். செலவுகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையில் திறமையாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். மனதில் நினைத்த வேலைகளை எல்லாம் சரியான நேரத்தில் செய்து முடித்து மனநிறைவை பெறுவீர்கள். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.
Tags:
Rasi Palan