சரிகமப நிகழ்ச்சி ஊடாக மக்கள் மனங்களை வென்ற இளம் பாடகி ஜோகஸ்ரீ யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் வந்த பாடகி ஜோகஸ்ரீக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 மூலம் புகழ்பெற்ற இளம் பாடகி யோகஸ்ரீ.
தமிழகத்தின் கரூரைச் சேர்ந்த இவர், தன்னுடைய மென்மையான குரல் மற்றும் சிறந்த பாடல்களுக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக யோகஸ்ரீ யாழிற்கு வருகை தந்துள்ளார்.
நாளையதினம் யாழில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக யோகஸ்ரீ யாழிற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் நிகழ்ச்சி ஊடாக உலக தமிழர் நெஞ்சங்களிலும் இடம்பிடித்தவர் ஜோகஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது.
