இன்றைய ராசிபலன் - 01.03.2026..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கப் போகிறது. வீட்டில் எதிர்பாராத விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய முடியாத சூழலும் உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போக வாய்ப்பு உள்ளது. விடுமுறை நாளாகவே இருந்தாலும் இந்த நாள் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். சிரமம் பார்க்காமல் நேரத்தை வீணடிக்காமல் உங்கள் கடமைகளை சரியாக செய்து விடுங்கள். இல்லையென்றால் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புகள் உள்ளது. அதற்காக பயப்படக்கூடாது. சின்ன சின்ன வேலையாக இருந்தாலும், பெரிய வேலையாக இருந்தாலும் பொறுப்பு கவனம் அதிகம் தேவை.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். இன்று விடுமுறை நாள் என்பதால் வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு அமைதியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக டென்ஷன் இருக்காது.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். நல்ல ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். கடமையிலிருந்தும் தவறாமல் நடந்து கொள்வீர்கள். மனதில் இருந்து வந்த கஷ்டங்கள் விலகும் நாள். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்ன சின்ன ஏமாற்றங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பெரிதாக பாதிப்புகள் இருக்காது. உங்கள் வாழ்க்கையின் நடைமுறை விஷயங்களில் நிறைய நல்ல அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த சிரமங்கள் விலகும். வெளிநாட்டில் வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று பிரச்சனைகளை கண்டு அஞ்ச கூடாது. துணிந்து போராடக்கூடிய தைரியம் உங்களுக்கு தேவை. மனதை உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். இறைவனின் மீது நம்பிக்கை வையுங்கள். கோழைத்தனத்திலிருந்து வெளி வந்தால் இந்த நாள் நிச்சயம் நல்லது நடக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ப்ரோமோஷன்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும்‌. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களை பொறுத்தவரையில் இன்று செலவுகளை கொஞ்சம் சமாளிக்க வேண்டும்‌. செலவுகளை குறைத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. மாத தொடக்கத்திலேயே நிறைய செலவு செய்தால் பிறகு மாதக் கடைசியில் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை வரும் ஜாக்கிரதை.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கான நல்ல ஆதரவை கொடுப்பார்கள். உடன் பிறந்தவர்கள் நண்பர்களால் நல்ல அனுபவம் கிடைக்கும் நாள் இன்று.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்னதாக மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். ஒரு நல்ல விஷயத்தை செய்யலாமா? வேண்டாமா என்று ஆயிரம் முறை சிந்திப்பீர்கள். சிந்தனை மேலோகம் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் குழப்பங்கள் வரக்கூடிய நாள். சிவனை மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்யுங்கள் பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனக்கவலை கொஞ்சம் இருக்கும். சோகத்தோடு தான் சுற்றிக்கொண்டு திரிவீர்கள். விடுமுறை நாளை கூட முழுசையாக கொண்டாட முடியாது. இருந்தாலும் கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்ளுங்கள். பொறுப்புகளை விட்டு விலகி நிற்காதீர்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்காலத்திற்கு தேவையான முதலீடுகளை செய்யலாம். இன்று தேடித்தேடி நீங்கள் செய்யும் நல்லது, எதிர்காலத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்துங்கள் நல்லதே நடக்கும்.
Previous Post Next Post


Put your ad code here