இன்றைய ராசிபலன் - 07.03.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். எந்த வேலையிலும் அலட்சியம் இருக்கக் கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். நீண்ட தூர பயணங்களின் போது ஜாக்கிரதை. வண்டி வாகனம் ஓட்டும் போது அலட்சியம் இருக்கக்கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்தோடு இருக்க வேண்டும். தேவையற்ற சந்தேகங்களை மனதில் இருந்து தூக்கி வெளியே வீசி விடுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். உடல் சோர்வு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. நேரத்தை வீணடிக்காமல் கடமையில் கவனமாக இருங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நேரத்திற்கு நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று, இந்த நாள் இனிய நாளாக அமையும். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்பு விலகும். உறவினர்களோடு நல்லுறவு ஏற்படும். பயணங்கள் இனிதே அமையும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு நல்லதொரு பலன் கிடைக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று மனநிறைவான நாள். பொன் பொருள் சேர்க்கை உண்டு.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் மன வருத்தம் இருக்கக்கூடிய நாளாக தான் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்கள் எளிதில் நடக்காது. சின்ன சின்ன ஏமாற்றங்கள் மனதை சங்கடப்படுத்தும். மனதிற்கு பிடித்தவர்களோடு சண்டை சச்சரவு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கவனமாக இருங்கள். முன்கோபம் வேண்டாம் அவசரம் வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரையில் சுறுசுறுப்பு தேவை. தாமதத்தால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. முக்கியமான மீட்டிங் அப்பாயிண்ட்மெண்ட் இருந்தா ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்வது நல்லது. முக்கியமான பொருட்களை கவனமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். சின்ன சின்ன பெட்டி கடை வைத்திருப்பவர்களுக்கு கூட இன்று பெரிய அளவில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாய்ப்புகளை கை நழுவ விடாதீர்கள். எதிர்கால சேமிப்புக்கு இன்று நீங்கள் போடும் பிள்ளையார் சுழி, நல்ல வரவேற்பை கொடுக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரையில் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். ஒரு வேலையை கையில் எடுத்தவுடன் முழுமையாக முடியாது. பலமுறை முயற்சி செய்த பிறகுதான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புது முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். முக்கியமான வேலைகளை நாளை செய்யுங்கள். அன்றாட வேலையில் மட்டும் இன்று கவனம் செலுத்தினால் போதும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். திறமையாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுடைய செயல், அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருக்கும். வாழ்ந்தால் உங்களைப் போல வாழ வேண்டும் என்று, சுற்றி இருப்பவர்கள் பேசுவார்கள். மனதிற்கு சந்தோஷம் நிறைந்த நாள் இன்று.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். கடன் சுமை குறையும். நீண்ட தூர பயணங்களால் நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். மனதில் இருந்த சந்தேகம் நீங்கும். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புது முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் தடையாக இருந்த விஷயங்கள் எல்லாம் விலகி விடும். வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிரமோஷன் சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கெட்ட பெயர் எடுத்த அதே இடத்தில் இன்று நல்ல பெயரும் வாங்கிருவீங்க. நல்லது நடக்கும் நாள் இன்று.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பீர்கள். மனதில் இருந்த பாரம் குறையும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும்.. உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும் இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
Previous Post Next Post


Put your ad code here