இன்றைய ராசிபலன் - 08.03.2026..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த கோவில்களுக்கு குடும்பத்தோடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு தானாக விளக்கும். நிம்மதி கிடைக்கும் நாள் இன்று. கூடவே தேவையான ஓய்வும் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் தேடி வரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு அசதி இருக்கும். விடுமுறை நாள் என்பதால் அவரவருக்கு தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூர பயணங்களை கூடுமானவரை தவிர்த்துக் கொள்வது நல்லது. முதியவர்கள் வெயில் நேரத்தில் வெளியில் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு அதிகரிக்கும். புதிய முதலீடுகளுக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நண்பர்களோடு நேரத்தை செலவு செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த விடுமுறை நாளை என்ஜாய் பண்ணுவீங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களுடைய பேச்சில் இன்று நேர்மை வெளிப்படும். செயல்பாட்டில் நேர்மை இருக்கும். உங்களுடைய நேர்மை உங்களுக்கான அங்கீகாரத்தை கொண்டு வந்து சேர்க்கும். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருக்கக்கூடிய உங்களுக்கு தேவையான அத்தனை நல்லதும் இன்று கைகூடி வரும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷமான நிம்மதியான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். பழைய பகையை எல்லாம் மனதில் இருந்து தூக்கி எறிவீர்கள். எதிரி பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கவனமாக செயல்பட வேண்டும். தேவையற்ற எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மாணவர்களுக்கு படிக்கக்கூடிய விஷயங்களில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உறவுகளால் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. வேலை வியாபாரம் எல்லாவற்றிலும் சின்னதாக எதிர்ப்பை சந்திப்பீர்கள். நல்ல அனுபவம் கிடைக்கும். இருந்தாலும் மனம் தளராமல் தைரியத்தோடு செயல்பட வேண்டும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதை உடனடியாக செய்து முடிக்க முடியாது. சொல்லப் போனால் இன்று இழுபறியான நாளாக இருக்கப் போகிறது. புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். தெரியாத விஷயங்களில் காலை வைக்க வேண்டாம். மனதை ஒருநிலைப்படுத்தி அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சுகளும் வீட்டில் பேச துவங்குவார்கள். மனதிற்கு பிடித்த நபரை கரம் பிரிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். கெட்டி மேல சத்தத்திற்கு பிள்ளையார் சுழி போடக்கூடிய நாள் இன்று.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று யோகக்காரர்களாக வலம் வரப்போகிறீர்கள். நீங்கள் செல்லும் இடமெல்லாம் சந்தோஷம் இருக்கும். உங்களுடைய பேச்சாற்றல் வெளிப்படும். நகைச்சுவை திறமையால், நாள்தோறும் அழுது கொண்டிருந்தவர்களை கூட சிரிக்க வைக்க போறீங்க. நிறைய பேருக்கு பிடித்த நபரா நீங்க மாற போறீங்க. இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். செல்லும் இடமெல்லாம் மதிப்பு மரியாதையும் உயரும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் கிடைக்கும். பெண்களுக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை குறையும். பிரச்சனைகளிலிருந்து விடுபடக்கூடிய லக்கியான நாள் இன்று.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இந்த நிறைய ஆதரவு கிடைக்கும். எல்லா விஷயத்திலும் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். பக்குவம் வெளிப்படக்கூடிய நாள் இன்று. வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த கவனக் குறைவை சரி செய்து கொள்வீர்கள். உறவுகளிடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று பாச போராட்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிரி பிரச்சனைகள் நீங்கும். நீங்கள் செய்த தவறை எண்ணி நீங்களே வருத்தப்படுவீர்கள். உணர்ச்சிவசப்படுவதை குறைத்துக் கொள்ளுங்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்துவது எப்படி என்பதை கற்றுக் கொண்டால் உங்களுக்கு பிரச்சனை இல்லை.
Previous Post Next Post


Put your ad code here