
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். வாரத்தின் முதல் நாளே மன நிறைவோடு உங்களுடைய வேலையை துவங்குவீர்கள். முருகனின் அருளால் இன்று எதிர்பாராத அதிர்ஷ்ட செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வரும் வாய்ப்புகளை தட்டிக் கழிக்கும் படி எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். எதிர்கால சேமிப்பிற்கு தேவையான பிள்ளையார் சுழியை போடலாம். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். குடும்ப பிரச்சினைகளை செவி கொடுத்து கேளுங்கள். உறவுகளுக்குள் இருக்கும் மனக்கசப்பும் விலகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். விவசாயிகள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று திறமையாக செயல்படுவீர்கள். யாராலும் உங்களை பேசி ஜெயிக்கவே முடியாது. பிரச்சனையாக இருந்த விஷயங்களை எல்லாம் கூட, பேசிப்பேசியே சரி செய்து ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும் நாள் இன்று.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று மன சலனம் கொஞ்சம் இருக்கும். மனதில் தேவையற்ற பிரச்சனைகள் வந்து போகும். வேலையில் முழுசாக கவனம் செலுத்த முடியாது. இருப்பினும் உங்களுடைய மனதை ஒருநிலைப்படுத்த உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். பிடித்த கடவுளை கும்பிடுங்கள். பிடித்த பாடல் இரண்டு கேளுங்கள். நிச்சயம் மனது நல்வழிப்படும் இறைவனின் ஆசிர்வாதத்தால் நல்லதே நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாள் உழைப்புக்கு இன்று சரியான பரிசு கிடைக்கும். மன நிறைவு அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகளுக்குள் இருந்து வந்த மன கசப்பு நீங்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். இழந்த சந்தோஷம் மீண்டும் கிடைக்கும். சந்தோஷத்தில் இன்று நேரம் போவதே தெரியாது. நீண்ட தூர பயணங்கள் வரும். மனதிற்கு பிடித்த நபரோடு நேரத்தை செலவு செய்வீர்கள். எவ்வளவு சந்தோஷம் வந்தாலும் நம்முடைய கடமை கடமையிலிருந்து தவர கூடாது அல்லவா. கடமையில் கவனமாக செயல்படுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். எந்த ஆர்ப்பாட்டமும் செய்யக்கூடாது. பிரச்சனைகள் வந்தாலும் எதிர்ப்புகள் வந்தாலும் நிதானமாக நின்று சமாளித்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும். இறை வழிபாடு செய்யுங்கள். மனதை உறுதியோடு வைத்துக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன மறதி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பெரிய பெரிய பொறுப்போடு இருப்பவர்கள், மீட்டிங் அட்டென்ட் பண்றவங்க இன்டர்வியூக்கு போறவங்க எல்லாம் என்று கவனமாக செயல்பட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் நிறைந்த சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எந்த பின்னடைவும் வராது. உங்களுடைய கடமைகளிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். நேர்வழியில் நடப்பீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுறுசுறுப்பு வெளிப்படும். இதுநாள் வரை கிடப்பில் இருந்த வேலைகளை கையில் எடுங்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு கூட இன்று நல்லதொரு தீர்வு கிடைக்கும். இறையருள் பரிபூரணமாக கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். சுபகாரிய தடை விலகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். சோம்பேறித்தனம் விளக்கும். உற்சாகத்தோடு இந்த நாளை துவங்குவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். பயணங்களில் சில சங்கடங்கள் வரலாம் ஜாக்கிரதை.
Tags:
Rasi Palan