சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..!!!


நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றுகின்றன. இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன்.

இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவது மட்டுமல்லாமல், 13 நாட்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தையும் மாற்றுவார். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். மேலும் மார்ச் 18 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சூரியன் மார்ச் 31 ஆம் தேதி வரை இருந்து, பின் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவார்.

இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவானின் நட்சத்திரத்தில் சூரியன் பயணிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும், செல்வம் பெருகும். அதோடு தன்னம்பிக்கையும், தலைமைத்துவ திறன்களும் மேம்படும். இப்போது சூரியன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிப்பதால் எந்த ராசிக்காரர்களுக்கு மார்ச் 31 வரை அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

கடகம்

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் கனவு இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் இக்காலத்தில் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

மகரம்

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலனைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, அந்த சொத்துக்களால் நந்ந நிதி ஆதாயம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

மீனம்

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால், மீன ராசிக்காரர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இதுவரை மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, மனம் தெளிவு பெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலை உயரும்.
Previous Post Next Post


Put your ad code here