ஜோதிடத்தில் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் சனி பகவான். இவர் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலனை தவறாமல் வழங்கக்கூடியவர். இதனால் இவரை நீதிமான் என்றும் அழைப்பர். இப்படிப்பட்ட சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். மேலும் இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.
நவகிரகங்களிலேயே ஒரு ராசியில் நீண்ட நாள் இருக்கக்கூடியவர் சனி பகவான். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் மார்ச் 06 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் மார்ச் 11 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். அதாவது சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கவுள்ளார். இதனால் சனி பகவான் சற்று வலுவிழந்து இருப்பார். ஜோதிடத்தில் சனி அஸ்தமனமாவது மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.
சனி பகவான் அஸ்தமனமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் சனியின் நிலையால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காணவுள்ளனர். அதுவும் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது மீன ராசியில் சனி அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதன் விளைவுகள் நன்கு தெரியும். முக்கியமாக பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக காத்திருந்தவர்களுக்கு இக்காலத்தில் அது கிடைக்கும். கடின உழைப்புக்கான பலனை இக்காலத்தில் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சனி பகவானின் ஆசியால் இக்காலத்தில் கடின உழைப்பின் முழு பலன் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திட்டங்கள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஏழரை சனியின் தாக்கம் சற்று குறையும். மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிலுவையில் இருக்கும் வேலைகள் சிறப்பாக முடிவடையும். வணிகர்களும் நல்ல லாபத்தைத் தரும் ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். ஏழரை சனி தொடங்கியிருந்தாலும், சனி அஸ்தமன நிலையில் இருப்பதால், சற்று மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். உறவுகளில் இருந்த விரிசல்கள் நீங்கும்.
Tags:
Rasi Palan
