125 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்து; 66 பேர் பலி..!!!


கொலம்பியாவின் புவேர்ட்டோ லெகுயிசாமோவில் திங்கட்கிழமை (23) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரும்பாலும் இராணுவ வீரர்கள் உட்பட 125 பேரை ஏற்றிச் சென்ற இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது 66 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் இதனை உறுதிபடுத்திய துணை மேயர் கார்லோஸ் கிளாரோஸ், உயிரிழந்தவர்களின் உடல்கள் அந்தச் சிறிய நகரத்தின் உள்ள வைத்தியசாலை ஒன்றின் பிரதே அறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறினார்.

மேலும், நகரத்தில் உள்ள இரண்டு வைத்தியசாலைகளில் காயமடைந்தவர்களுக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். விபத்து நடந்த இடத்திலிருந்து பலர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் இறுதி எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஹெர்குலஸ் சி-130 விமானத்தில் 125 பேர் இருந்ததாக விமானப்படை கூறியுள்ளது.

எக்குவாடோர் மற்றும் பெரு நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அமேசானிய மாகாணமான புடுமாயோவில் புவேர்ட்டோ லெகுயிசாமோ நகரம் அமைந்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here