இன்றைய ராசிபலன் - 17.03.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வரும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான சூழ்நிலை அமையும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். முக்கியமான வேலைகளுக்கு செல்வதற்கு முன்பு முருகரை வழிபாடு செய்துவிட்டு, உங்கள் வேலையை துவங்குவது வெற்றியைத் தரும். வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சண்டை போட வேண்டாம். பிரச்சனை தேடி வந்தாலும் அமைதியா இருந்திருங்க.

 

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக எந்த பிரச்சனையும் வராது. குறித்த நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். செலவுக்கு ஏற்ப பணம் கையில் தங்கும். மன நிறைவான நாள். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் நாள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஆதரவு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இத்தனை நாட்களாக இந்த சின்ன விஷயம் தெரியாமல் கஷ்டப்பட்டோமே, என்று ஒரு ரகசியத்தை கண்டுபிடிக்க போறீங்க. அந்த ரகசியம் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும். நல்லது நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

 

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டு. செலவுகள் குறையும். சேமிப்புகள் உயரும் நாள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வயதானவர்கள், வெயில் நேரத்தில், வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக செல்லும். தண்ணீர் குடித்து ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கோங்க. மற்றபடி இந்த நாள் நல்ல நாளாகவே அமையும்.

 

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியாக இருக்க வேண்டும். முன் கோபம் வேண்டாம். அவசர முடிவு வேண்டாம். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். பிடித்த தெய்வத்தின் பெயரை மனதிற்கு சொல்லிக் கொண்டே இருங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நன்மைகள் தேடி வரும் நாளாக அமையும். நீங்கள் பிரச்சினை செய்தாலும், அந்த பிரச்சனையின் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள். பயணங்கள் இனிதாக அமையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷம் இரட்டிப்பாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் கவனக்குறைவு வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மனபயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும் போது கவனம் இருக்கட்டும். பயணங்களின் போது கவனம் இருக்கட்டும். தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் முன்கூட்டியே தேர்வு எழுதும் பள்ளிக்கு செல்வது நல்லது. தாமதத்தால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. பதட்டம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் என்று பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவசரப்படக் கூடாது. பெரியவர்களின் பேச்சை கேட்க வேண்டும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும். முதலீடுகளின் போது கவனம் தேவை. எந்த விஷயத்திலும் அகல கால் வைக்கக் கூடாது. தெரியாத விஷயத்தில் தலையிடக்கூடாது. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். செலவுகள் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். பயணங்கள் இனிமையாக அமையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உணவு பழக்க வழக்கத்தை மட்டும் கட்டுப்பாடு தேவை. உடற்பயிற்சி மேற்கொள்வது ஆரோக்கியத்தை சீர் செய்யும்.
Previous Post Next Post


Put your ad code here