மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள். பிரச்சனை தரும் விஷயத்தில் இருந்து தானாக வெளிவந்து விடுவீர்கள். நண்பர்களோடு உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். மன நிம்மதி கிடைக்கும். இறைவழிபாடு செய்யுங்கள். கவலைகள் மறக்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். பயணங்களின் போது மட்டும் இன்று கவனத்தோடு இருக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேவைக்கு ஏற்றவாறு பணம் கையில் இருக்காது. சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் வரும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வாக்குவாதம் செய்யாதீங்க. விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனம் தெளிவாக இருக்கும். குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். நிம்மதி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன நிறைவான நாள் இன்று.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வேலையில் நல்ல பெயர் வாங்குவீர்கள். சேமிப்பு உயரும் நாளாகவும் இருக்கும். பெரியவர்களை ஆசீர்வாதத்தால், இறைவனின் ஆசிர்வாதத்தால் இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். குழந்தைகளுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலட்சியமாக ஒரு வேலையை கையில் எடுக்க வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இரக்க குணம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அதேசமயம் உங்களுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும். உங்களுடைய குடும்பத்திலும் அக்கறை காட்ட வேண்டும். வேலையும் வியாபாரமும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல குடும்பமும் மனைவியும் குழந்தையும் முக்கியம் என்பதை மறந்துடாதீங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்பு அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும், விடா முயற்சி எடுத்து வெற்றி அடைவீர்கள். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடியுங்கள். உடம்பை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள். நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கவனத்துடன் செயல்பட வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். நமக்குத் தெரிந்தவர்கள் தானே என்று நம்பி மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினால், சிக்கல்களில் சிக்க வாய்ப்பு உள்ளது, ஜாக்கிரதை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் கை கூடி வரும் நாளாக இருக்கும். நல்ல நேரம் வேலை செய்ய துவங்கப் போகிறது. வரும் வாய்ப்புகளை கை நழுவ விடாதீர்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள். பெரியவர்களது பேச்சை கேட்டு நடங்க. சோம்பேறித்தனத்தை விட்டுருங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கஷ்டங்கள் விலகும் நாள். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. சுப செலவுகள் உண்டு. நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான சுகமான நாளாக இருக்கும். வேலையும் வியாபாரமும் எப்போதும் போல செல்லும். நிதிநிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப பணம் கைக்கு வரும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பும் நீங்கும். பகையால் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள் நிம்மதி கிடைக்கும் நாள் இன்று.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உதவிகள் கிடைக்கும் நாள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்க நிலவும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட தூர பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். கைபேசி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். நேரத்தை மட்டும் வீணடிச்சிடாதீங்க நல்லதே நடக்கும்.
Tags:
Rasi Palan