இன்றைய ராசிபலன் - 21.03.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம், அன்பு, பாசம், காதல் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய வாழ்க்கையில் இன்பமான சம்பவங்கள் நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். மனதில் நீண்ட நாள் பதிக்க வைத்திருந்த காதலை வெளிப்படுத்துவீர்கள். பாசிட்டிவ்வான ரிசல்ட் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்து சிரமங்கள் விலகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும் நாளாக அமையப் போகிறது. நீங்கள் நினைத்தது எல்லாம் அப்படியே நடக்காது. நினைக்காத சில விஷயங்கள் நடக்கும் போது, மனது வருத்தப்படத்தான் செய்யும். அதற்காக சோர்ந்து போய் உட்கார கூடாது. உங்களுக்கு தேவையான விஷயங்களை கஷ்ட பட்டு தான் பெற்றுக்கொள்ள வேண்டும். இறைவழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூடுதல் வேலை இருக்கும். உடல் சோர்வு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. நிறைய தண்ணீர் குடியுங்கள். வெயில் சமயத்தில் வெளியே செல்லாமல் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய வேலை இருப்பது போல ஒரு சூழல் உண்டாகும். ஆனால் வேலையை எல்லாம் பக்காவாக செய்து முடித்து, நீங்கள் ஜெயித்து விடுவீர்கள். அந்த அளவுக்கு சுறுசுறுப்பு வெளிப்படும் நாள். நேரத்தை வீணடிக்க மாட்டீங்க. உங்களுடைய கடமையில் குறியாக இருப்பீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும் நல்லது நடக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள், வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். நீண்ட தூர பயணங்கள் இனிமையாக அமையும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனம் தேவை. உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, தேவையான உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள். சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்க பேச்சு வார்த்தை துவங்கலாம். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். சுபமான நாளாக இருக்கப் போகிறது. இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி செல்லுங்கள். மனபாரம் விலகும் இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த பாசமான, உற்சாகமான நாளாக இருக்கும். ஆமாங்க, யார் மீது எல்லாம் நீங்கள் வெறுப்பு காட்டினீர்களோ, அவர்கள் மீது பாசம் காட்டுவீங்க. எதிரி தொல்லை நீங்கும். உங்களுக்கு தேவையான அன்பும் பாசமும் கிடைக்கும். நண்பர்கள் உறவுகளுடைய ஆதரவு கிடைக்கும். இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சின்ன சின்ன எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பேசும்போது கவனமாக இருங்க. புது முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருங்கள். குறிப்பாக இளைஞர்கள் மாணவர்கள் இன்று நிதானதோடு செயல்பட வேண்டும். முன்கோபம் வேண்டாம். அவசரம் வேண்டாம். தெரியாத விஷயத்தில் கால் வைக்காதீங்க. குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷார்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வாரா கடன் வசூலாகும். நிதிநிலைமை சீராகும். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. விருந்தாளிகளின் வருகையால் வீடு நிறைந்து இருக்கும். உங்களுடைய மனதும் நிறைந்து இருக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த வேலைகள் எல்லாம் நல்லபடியாக முடியும். ஆசைகள் நிறைவேறும் நாள். நீங்கள் நினைத்தபடி, உங்கள் லட்சியத்தை அடைவதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் இனிமையாக அமையும். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். இந்த நாள் நேரம் போவதே தெரியாது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் இழந்த விஷயங்களை மீட்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி உங்கள் பக்கமே இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வேலையிலும் வியாபாரத்திலும் கவனமாக இருப்பீர்கள், உங்கள் கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிரமங்கள் விலகும். அடுத்தவர்களுடைய கஷ்டத்தில் பங்கேற்றுக் கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய சிரமங்களையும் புரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவி விரிசல் சரியாகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
Previous Post Next Post


Put your ad code here