இன்றைய ராசிபலன் - 27.03.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நல்லது நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும். வாரா கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும். சேமிப்பு உயரும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது நண்பர்களின் அறிமுகம், புது அனுபவத்தை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு தானாக விளக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சமநோக்கு நாளாக இருக்கும். பெருசாக எந்த பிரச்சனைகளும் வராது. உங்களுடைய கடமைகளை சரியாக செய்து விடுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இறை வழிபாடு செய்யுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வேலைகள் சரிவர நடக்கும். உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். மன குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். நிதிநிலைமை சீராகும். வருமானம் பெருகும் நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்களை மட்டும் தவிர்த்துக் கொள்வது நல்லது.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நினைத்த வேலைகள் நல்லபடியாக நடக்கும். உங்களுக்கு ஆதரவாக, சுற்றி இருப்பவர்கள் செயல்படுவார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிரி தொல்லை நீங்கும். மன நிம்மதி கிடைக்கும் நாள் இன்று.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் நினைத்து பார்க்காத நல்லது உங்களை தேடி வர போகிறது. வாராக்கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை மேலோங்கும். பெரிய அளவில் இருந்து வந்த கஷ்டங்கள் கூட, ஒன்றுமே இல்லாமல் காணாமல் போகும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். கட்டுமான தொழில் சீராக நடக்கும். கமிஷன் தொழில் கைநிறைய லாபத்தை பெற்று தரும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்களுடன் அதிகமாக நேரத்தை செலவழிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லா நட்பில் இருந்து விலகி இருங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். வெளியூர் பயணங்கள் நல்லபடியாக அமையும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். மனதிற்கு பிடித்த நபருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். தேவையில்லாத டென்ஷன் குறையும். வண்டி வாகனம் ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். வருமானம் சீராக இருக்கும். உங்களுடைய தேவைகளை நீங்கள் சரியாக பூர்த்தி செய்து கொள்வீர்கள். உங்களால் முடிந்த அளவு அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மன நிம்மதி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும் நாள் இன்று.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று ஆசைகள் நிறைவேறும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சுபசெலவுகள் ஏற்படும் நாள். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். முன்கோபம் வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். வேலையிலும் வியாபாரத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் விலகும். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
Previous Post Next Post


Put your ad code here