மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். பயணங்களின் போது மட்டும் கவனம் இருக்கட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும் நாள் இன்று.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புது அனுபவங்கள் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் கூட சுலபமாக சரியாகிவிடும். இறையருள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பு இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பெரிய அளவில் லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். மனதிற்கு பிடித்தவர்களோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இரக்க குணம் வெளிப்படும். அன்பு பாசம் குடும்பம் காதல் என்று இந்த நாள் இனிய நாளாக செல்ல போகிறது. நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். விவாகரத்து வரை சென்ற கணவன் மனைவி கூட, திரும்ப சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இருந்திருக்கும் தம்பதிகள் சேருவதற்கு, ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். இறைவனுக்கு நன்றி செல்வங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சூப்பரான நாளாக இருக்கப் போகிறது. சுகபோக வாழ்க்கை தான். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம், நல்ல கவனிப்பு என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். வேலையில் மதிப்பும் மரியாதையும் கூடும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் இருந்த நஷ்டம் லாபமாக மாறும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமையான நாளாக இருக்கும். கௌரவம் உயரும். அவமானங்கள் எல்லாம் பாராட்டுகளாக மாறும். பட்ட கஷ்டத்திற்கு நல்லதொரு பலன் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. அனாவசியமாக பேசுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று ஆதரவாக பல நன்மைகள் நடக்கப்போகிறது. உங்களை எதிர்த்து பேசியவர்கள், உங்கள் மீது பொறாமை பட்டவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவார்கள். எதிரி தொல்லை விலகும். உங்களுடைய நல்ல மனசு அனைவருக்கும் புரியும். விரோதம் எல்லாம் விலகி விடும். சொத்து சுகம் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கம் வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். சொத்து சுகம் வாங்க விற்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். கமிஷன் தொழில் நல லாபத்தை கொடுக்கும். வீட்டில் பழுதான பொருட்களை சரி பாருங்கள். வீட்டை சுத்தம் செய்வது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது இதுபோல முயற்சிகளை இன்று மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வான நாளாக இருக்கும். ப்ரோமோஷன் சம்பள உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடத்தலாம். இடமாற்றத்திற்கு முயற்சி செய்யலாம். அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்யலாம். இதுபோல நீங்கள் இன்று மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கப் போகிறது. மருத்துவ செலவு குறையும் சேமிப்பு உயரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். டென்ஷன் குறையும். எதிரி தொல்லை நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான நிலை உண்டாகும். வீண் விரைய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். கூடுமானவரை பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். பெயர் புகழ் அந்தஸ்து உயரும். வேலையில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும், பெருசாக சிக்கல்கள் இல்லை. பிரச்சனைகளை பேசி சமாளிக்கும் அளவிற்கு உங்களுக்கான திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் நிதானம் தேவை. வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது. முன்கோபம் வேண்டாம்.
Tags:
Rasi Palan