30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சுப யோகம்: ஏப்ரலில் ஜாக்பாட் அடிக்கபோவது இந்த 5 ராசிக்காரங்க தான்..!!!


ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி சுப யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் சிறப்பான யோகத்தை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

ஒவ்வொரு மாதமும் அப்படி கிரகங்களால் பல யோகங்கள் உருவாகி சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்திலும் ஒரு அற்புதமான கிரக சேர்க்கையால் சுப யோகம் ஒன்று உருவாகவுள்ளது.

வேத நாட்காட்டியின் படி, ஏப்ரல் 02 ஆம் தேதி கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மீன ராசிக்குள் நுழைவார். ஏற்கனவே இந்த மீன ராசியில் நீதிமான் சனி பகவான் சுமார் 30 ஆண்டுகள் கழித்து பயணித்து வருகிறார். இப்படி குரு பகவானின் மீன ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

அதுவும் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் இந்த யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையிலும் காணப்படும். இப்போது 30 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் சனி, செவ்வாய், புதன் சேர்க்கையால் உருவாகவுள்ள திரிகிரக யோகத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும், மனக்கவலைகள் அதிகரிக்கும். இருப்பினும் வெளிநாட்டு பயணங்களுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் தேவையற்ற செலவுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய தொடர்புகளால் எதிர்பாராத பல நன்மைகளைப் பெறக்கூடும்.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வேலை செய்ய வேண்டியது அவசியம். சிலருக்கு இக்காலத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

கடகம்

கடக ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் இழப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. முதலீடுகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்திலும் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். கூட்டு வணிகம் செய்பவர்கள் எந்த முடிவுகளை எடுக்கும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.

துலாம்

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். ஆயினும் கடின உழைப்பால் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் சற்று விழிப்போடு இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.

தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, சந்தோஷம் அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசியின் 3 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சாற்றல் மேம்படும். சிறப்பான தகவல் தொடர்பு திறனால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசியில் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். இருப்பினும் செலவுகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், ஒன்றுக்கு பலமுறை நன்கு யோசித்து எடுக்க வேண்டும். அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை இருமடங்கு அதிகரிக்கும். வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். எப்போதும் மனநிலையை சமநிலையில் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
Previous Post Next Post


Put your ad code here