நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கழக உறுப்பினர்களுக்கிடையே உற்சாகமான கிரிக்கெட் போட்டி நேற்று(22.03.2026) நடைபெற்றது.
ரசிகர்களின் ஆதரவுடன் இப்போட்டி மிகுந்த உற்சாகத்துடன் நடந்தது.
இந்தப் போட்டியில் “Neervely Bulls” மற்றும் “Neervely Kings” அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய Neervely Bulls அணி, 10 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்கள் எடுத்தது. டினு (23) மற்றும் கிதுசாந்த் (12).
பின்னர் பதிலடி கொடுத்த Neervely Kings அணி, 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்கள் குவித்து முன்னிலை பெற்றது. இதில் கபிலன் (56) அதிரடி ஆட்டம் காட்டினார். அவருக்கு போண்டன் (28) மற்றும் திவேயன் (17) நல்ல துணை வழங்கினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பெடுத்தாடிய Neervely Bulls அணி, இந்த முறை அபாரமாக விளையாடி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் குவித்தது. ஐங்கரன் (88*) மற்றும் Ms டிலா (67) இணைந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
இலக்கை துரத்திய Neervely Kings அணி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து இலக்கை அடைய முடியாமல் போனது. சாரு (24) மற்றும் தர்சன் (23)
மொத்தத்தில், Neervely Bulls அணி சிறந்த அணிச்செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டி விளையாட்டு உணர்வையும், நட்புறவையும் வலுப்படுத்திய ஒரு சிறந்த நிகழ்வாக அமைந்தது.
- சர்மிலன்-