இன்றைய ராசிபலன் - 03.04.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நல்லது நடக்கும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யுங்கள். வங்கி கடன் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. மன நிறைவான அனுபவங்கள் கிடைக்கும் நாள் இன்று.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வேலையில் கொஞ்சம் நிதானதோடு நடந்து கொள்ளுங்கள். முன்கோபம் வேண்டாம். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வதும் நல்லது.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையான செலவு எது, தேவையில்லாத செலவு எது என்பதை புரிந்து செயல்படுங்கள். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மன நிம்மதி கிடைக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம், நேரத்திற்கு ஓய்வு என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஏதோ ஒரு சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்த முடியாது. சின்ன சின்ன பிரச்சனைகளை கூட பெரிய அளவில் சிந்தித்து, பிரச்சனையை பெருசாகிருவீங்க. கவனமாக செயல்பட வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். இறைவழிபாடு மனதிற்கு நிச்சயம் அமைதியை தரும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று மேன்மையாக நடந்து கொள்வீர்கள். எது நல்லது எது கெட்டது என்பதை புரிந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களை பொறுத்தவரை என்று வெற்றிவாகை சூடுவீர்கள். எதிலும் திறமையாக சிந்திப்பீர்கள். பெரிய அளவில் பிரச்சனைகள் வந்தாலும், அதை சுலபமாக சமாளித்து விடுவீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள். இன்று. வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக வெளிப்படும். தந்திரமாக செயல்படுவீர்கள். யாரிடத்தில், எப்படி பேச வேண்டும், என்ற சூட்சமத்தை தெரிந்து கொண்டு, காய்களை மெதுவாக நகர்த்துவீர்கள். வசீகரத் தோற்றமும், வசீகர பேச்சும் இன்று உங்களுக்கு பெரிய பாராட்டு பெற்று தரும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவசரப்படக்கூடாது. உயர் அதிகாரிகளிடம் போட்டி போடக்கூடாது. தலைகனம் வேண்டாம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். குடும்பத்திற்குள் பிரச்சனை வேண்டாம். கணவன் மனைவி வாக்குவாதம் வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கவனமாக செயல்பட வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலின் போது கவனம் இருக்கட்டும். உங்களுடைய உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலை பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வருமானம் உங்களை சந்தோஷப்படுத்தும். பல நாள் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவு ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் பெருசாக பாதிப்புகள் இல்லை.
Previous Post Next Post


Put your ad code here