இன்றைய ராசிபலன் - 06.04.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்க போகிறது. நிறைய பழைய ஞாபகங்கள் உங்களை சந்தோஷப்படுத்தும். நீண்ட நாள் பிரிந்த, மனதிற்கு பிடித்த நபரை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும். மனதை தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க உங்க மனதை காயப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. நிதானத்தோடு செயல்பட வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. எதுவும் கடந்து போகும் என்ற வாசகத்தை இன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். உங்களுடைய தனித்திறமைகள் வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று தடைகள் தடங்கல்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய புது முயற்சிகளை நாளை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நேரத்தை வீணடிக்க வேண்டாம். அனுபவ சாலிகளின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். உறவுகளோடு பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது உறவுகளின் அறிமுகம் உங்களுடைய சந்தோஷத்தை இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய கனவு நிறைவேறும்.

கன்னி


கன்னி ராசிஇன்று மன உறுதியோடு செயல்பட வேண்டும். தைரியத்தோடு இருக்க வேண்டும். சின்ன சின்ன ஏமாற்றங்கள் வந்தால் கூட அதை தாண்டி, முயற்சிகளை மேற்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற வேண்டும். ஏமாற்றங்களை கண்டு துவண்டு போகக் கூடாது. இறைவழிபாடு செய்யுங்கள். மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்த புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய ஒப்பந்தங்கள் போடலாம். எதிர்கால சேமிப்புக்கு பிள்ளையார் சுழி போடலாம். மாணவர்கள் எதிர்கால கல்வியை பற்றிய பேச்சு வார்த்தைகளை துவங்கலாம். நல்லதே நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள். உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லிக் கொள்வீர்கள். சோம்பேறித்தனம் வரும்போது உங்கள் தோல்களை நீங்களே தட்டிக் கொடுத்து கொள்வீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். மனம் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இல்லை. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுப போக வாழ்க்கை தான். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக சந்தோஷமாக செயல்படுவீர்கள். சென்ற இடமெல்லாம் மதிப்பும் மரியாதையும் கூடும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். வெற்றி வாகை சூடப் போகும் இந்த நாளில் உங்களால் இயன்ற உதவியை, இயலாதவர்களுக்கு செய்து மனமகிழ்ச்சி அடையுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி இருக்கும். சோம்பேறித்தனம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக சுறுசுறுப்பு இருக்காது. அன்றாட முக்கியமான வேலைகளை மட்டும் செய்துவிட்டு, தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். புது முயற்சிகளை நாளை தள்ளி வைத்துக் கொள்ளலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் தடைகள் விலகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாயகம் திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். குடும்ப விஷயத்தில் கூடுதல் பொறுப்புகள் இருக்கட்டும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். நிதிநிலைமை சீராக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனைகள் இல்லை. குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள். இருப்பினும் கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வரும். கவனமாக செயல்பட வேண்டும். பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது.
Previous Post Next Post


Put your ad code here