மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுப யோகம் கை கூடி வரக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்க பிள்ளையார் சுழி போடலாம். புது வேலை துவங்குவது, புது வியாபாரம் துவங்குவது போன்ற பேச்சு வார்த்தைகளை நடத்தலாம். நல்லதே நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று தைரியத்தோடு செயல்படுவீர்கள். துணிச்சல் வெளிப்படும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். பெரிய அளவில் இருந்து வந்த மன பாரம் நீங்கும். எதிரி தொல்லை விளக்கும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கி, குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். விவசாயிகளுக்கு இன்று நல்ல முன்னேற்றம் கொடுக்கும் நாளாக அமையும். எதிர்கால சேமிப்புக்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று நீங்கள் செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் ஒரு பரிசுப் பொருள் உங்களை சந்தோஷப்படுத்தும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த மந்தத்தன்மை விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று மன மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள். திறமையாக பேசுவீர்கள். உங்களுடைய வசீகரத் தோற்றம் வெளிப்படும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வியை தொடர்வதற்கு மாணவர்களுக்கு நல்ல பாசிட்டிவான ரிசல்ட் கிடைக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று பொறுமையாக இருக்க வேண்டும். சின்ன சின்ன சிக்கல்களை சந்திக்க கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை அமையும். பிரச்சனைகளை எதிர் கொள்ளும் தைரியம் தேவை. துவண்டு போகக்கூடாது. அவசரப்படக்கூடாது. மனமுடைந்து போகக்கூடாது. இறைவழிபாடு செய்யுங்கள் அனுபவசாலிகளின் பேச்சைக் கேளுங்கள் நல்லது நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உடல் சோர்வு, அசதி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தலைக்கு மேல் வேலை காத்துக் கொண்டிருக்கும். ஆனால் வேலையில் ஆர்வம் காட்ட முடியாது. நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வீண் விரைய செலவுகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். வெளியிடங்களுக்கு செல்லும்போது நிறைய தண்ணீர் குடியுங்கள். வெயில் நேரத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி தரும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். கடன் சுமை நீங்கும். வருமானம் பெருகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய ஒப்பந்தங்கள் போடலாம். நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பீர்கள். வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருப்பீர்கள். அடுத்தவர்களை நம்பி ஏமாறாத அளவுக்கு, உங்களுடைய அணுகுமுறை இருக்கும். நிறைய அனுபவ பாடங்களை கற்றுக் கொள்வீர்கள். அமைதியாக இருந்தாலும் இன்று தந்திரங்கள் வெளிப்படும் நாளாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். இருப்பினும் உங்களுடைய வேலைகளை எல்லாம் சீராக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். உடல் அசதி வராமல் இருக்க நிறைய தண்ணீர் குடியுங்கள். வெயில் நேரத்தில் வெளியிடங்களில் சுற்றி திரியாமல் கொள்ளுங்கள். முடிந்தவரை ஆரோக்கியமான உணவை மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது.
Tags:
Rasi Palan