மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. நிதானத்தோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உங்களை வந்து சேரும். தேவையற்ற எதிர்ப்புகளை சமாளிக்கும் பக்குவம் உங்களிடத்தில் இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக பேசுங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். குடும்ப பிரச்சனைகளை பெருசாக்காதீங்க. வாக்குவாதம் செய்யாதீங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். ஆக மொத்தத்தில் இன்று வெற்றி உங்கள் பக்கம் நிற்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று எதிர்பாராத வரவு இருக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு, நீண்ட நாள் வாரா கடன் வசூல் என்று ஏதோ ஒரு வகையில் பணம் உங்கள் கையை வந்து சேரும். உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மன நிம்மதி கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். சின்ன சின்ன மறதியால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வெளியூர் பிரயாணம் செய்பவர்கள், முக்கியமான மீட்டிங் போறவங்க உங்களுடைய பொருட்களை கவனமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான விஷயங்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. கவனமாக இருந்தால் பிரச்சனை இல்லை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். வேலை வியாபாரத்திலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். மனதிற்கு நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கம் வரும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை சந்தோஷத்தை கொடுக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி இருக்கும். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், பிரச்சனைகள் பெருசாக இல்லை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனைகள் வராது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று லாப நஷ்ட கணக்கை பார்த்து செயல்படுவீர்கள். ஆதாயம் இல்லாமல் ஒரு வேலையை கையில் எடுக்க மாட்டீர்கள், சின்ன சின்ன எதிரி பிரச்சனைகள், சின்ன சின்ன எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை வரும். அதிகம் பேசாதீங்க செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமையால் மனதில் சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மன பயம் பதட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். அனுபவ சாலைகளின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. தேவையில்லாத நண்பர்களிடம் இருந்து விலகியே இருங்கள். எதிரிகளோடு போட்டி போட வேண்டாம். வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுட கூடிய நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நிதிநிலைமை சீராகும். கடன் பிரச்சனையில் இருந்து விடுபட நல்ல சந்தர்ப்பங்கள் கைக்கூடி வரும். உங்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும். இருந்தாலும் தெரியாத விஷயத்தில் நீங்கள் இன்று காலை வைக்கக்கூடாது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பொது இடங்களில் பேசக்கூடாது. தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை அமையும், ஜாக்கிரதை.
Tags:
Rasi Palan