இன்றைய ராசிபலன் - 15.04.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் இதுநாள் வரை இல்லாத சுறுசுறுப்பு வெளிப்படும். நல்ல பெயர் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பெரிய அளவில் முன்னேற்றத்தை காண்பீர்கள். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். மனதளவில் சந்தோஷம் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசி காரர்களுக்கு இன்று நிதானம் தேவை. எந்த விஷயத்திலும் பேராசை வேண்டாம். தெரியாத விஷயத்தில் காலை வைக்காதீர்கள். பெரிய அளவில் முதலீடு செய்யாதீர்கள். விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக, தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் பொன் பொருள் சேர்க்கை உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனநிறைவான நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். கடன் சுமை குறையும். சேமிப்பு உயரும். நீண்ட தூர பயணங்களால் நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மனதில் சந்தோஷம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்தையும் சுறுசுறுப்பு வெளிப்படும். தேவையில்லாத எதிரிகள் உங்களை விட்டு தானாக விலகி செல்வார்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். வீண்விரய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொது பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல அனுசரனை இருக்கும். புது வாடிக்கையாளர்களின் வருகை மனதிற்கு நிறைவே கொடுக்கும். கட்டுமான தொழில் நல்ல லாபத்தை தரும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். என்ன முடிவுகளை எடுப்பது என்று தெரியாமல் இருப்பீர்கள். அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. மாணவர்கள் நிதானதோடு நடந்து கொள்ள வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்பட வேண்டாம். முன் அனுபவம் இல்லாத வேலையை கூடுமானவரை செய்யாதீங்க.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பு இருக்கும். தேவையான நேரத்தில் தேவையான உதவி சரியாக கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல நல்லதொரு பாதை தெரிய வரும். தீரா குழப்பங்கள் தீரும். கடன் சுமை குறையும். நிதி நிலைமை சீராகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். அதிகமான வேலை பளுவை தலைமையில் தூக்கிப்போட்டு கொள்ள வேண்டாம். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மருத்துவ செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் முழு கவனத்தை செலுத்துங்கள். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சீராக நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நிதானமான நிம்மதியான நாளாக இருக்கும். எல்லா வேலைகளும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே நடந்து முடியும். குடும்பத்தில் சந்தோஷம் வெளிப்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. மண்டி வாகனங்கள் ஓட்டும் போது கொஞ்சம் கவனம் தேவை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் குழப்பத்திற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு அதிர்ஷ்டம், அளிக்க காத்துக் கொண்டிருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் மனது நிம்மதி அடையும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கிய குறைபாடுகள் சரியாகும். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
Previous Post Next Post


Put your ad code here