மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். நிதிநிலைமை சீராகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். இந்த நாள் கொஞ்சம் சோகமாக நகரும். இருந்தாலும் உங்களுடைய கடமையிலிருந்து, நீங்கள் பின்வாங்க மாட்டீர்கள். நேரத்திற்கு உங்களுடைய வேலையை முடித்து விடுவீர்கள். இன்று புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். இறை வழிபாடு செய்வது நன்மையை தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். நிதிநிலைமை சீராகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். சில பேருக்கு பயணத்தின் மூலம் அலைச்சல் வர வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வேலையில் கவனம் தேவை. நேரத்தை வீணடிக்க கூடாது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். அலைச்சலால் உண்டான ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும். மன நிம்மதி கிடைக்கும். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லதே நடக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்றும் நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது மனிதர்களின் அனுபவம், புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். பல நாள் முயற்சிக்கு நல்லதொரு வெற்றியை கடவுள் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். கண் திருஷ்டி விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். வேலையும் வியாபாரமும் சுமூகமாக நடக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். சிக்கல்களில் இருந்து விடுபடுதீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். நிதிநிலைமை சீராக இருக்கும். பயணங்கள் இனிதே நிறைவடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று பேச்சாற்றல் நிறைந்த நாளாக இருக்கும். பலரால் செய்து முடிக்க முடியாத காரியத்தை, உங்களுடைய பேச்சுத் திறமையால் செய்து முடிப்பீர்கள். வசீகர தோற்றமும் வெளிப்படும். நல்லது நடக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காரியத்தடை விலகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை நீங்கும். பயணங்களின் போது கவனம் இருக்கட்டும். வண்டி வாகனம் ஓட்டும்போது அலட்சியம் வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும் நாளாக இருக்கும். உங்களுக்கான ஆதரவு நிச்சயம் கிடைக்கும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். உற்றார் உறவினர்களோடு இருந்து வந்த மனக்கசப்பு விலகி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வீட்டில் சுப காரிய தடைகள் விலகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான முன்னுரிமை கிடைக்கும். கடன் சுமை குறையும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மன நிறைவுஉண்டாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளோடு நல்ல உடன்பாடு ஏற்படும். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வுக்கான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும். முன்னேற்றம் நிறைந்த இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
Tags:
Rasi Palan