மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். மாணவர்கள் மேற்படிப்புக்காக, உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லதே நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று உஷாராக இருப்பீர்கள். ஆதாயம் இல்லாமல் ஒரு வேலையை கையில் எடுக்க மாட்டீர்கள். லாப நஷ்டம் நோக்கத்துடன் சிந்தித்து செயல்படுவீர்கள். கொஞ்சம் சுயநலமும் இருக்கும். சின்ன சின்னதாக புது எதிரிகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. எதற்கும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். பயணங்கள் இனிதாக நிறைவடையும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன அமைதி இருக்கும். உங்களுடைய மன குழப்பத்திற்கு தெளிவு பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம், நல்ல உபசரனை என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். உடல் சோர்வு நீங்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வருமானம் சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வாராக்கடன் வசூல் ஆகும். உங்களுடைய தேவைகள் பூர்த்தி ஆகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு நல்லதொரு விடிவு காலம் பிறக்கும். பட்ட அவமானத்திற்கு எல்லாம் நல்ல பதில் கிடைக்கும். தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கவனமாக செயல்பட வேண்டும். வார்த்தையில் கவனம் தேவை. பேச்சில் நிதானம் தேவை. முன்கோபம் வேண்டாம். உயர் அதிகாரிகளை எதிர்த்துக் கொள்ள வேண்டாம். புது முடிவுகள் எடுக்கும் போது ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. அவசர முடிவு எடுக்க வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களை பொறுத்த வரை இன்று மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். இறைவனின் பரிபூரண அருளால் நீங்கள் நினைக்காத நல்ல விஷயங்கள் கூட நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுக்கு கிடைத்த அவமானங்கள் எல்லாம் நல்ல பெயராக மாறும். எந்த இடத்தில் தலை குனிந்து நின்றீர்களோ, அந்த இடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பட்ட கஷ்டத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று குழப்பங்கள் நீங்கும். தெளிவாக சிந்திப்பீர்கள். தெளிவாக முடிவை எடுப்பீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்த பிரச்சனைகள் நீங்கி, மன நிம்மதி கிடைக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று நிதானமாக சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். கோபம் குறையும். நிதானம் வெளிப்படும். சுற்றி இருப்பவர்களோடு நல்ல உறவு உண்டாக்கும். புது நண்பர்களின் வருகை மனதிற்கு அமைதியைத் தரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். நிதிநிலைமை சீராகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புதிய மனிதர்களின் அனுபவம் புது விஷயங்களை கற்றுக் கொடுக்கும். பணத்தினுடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்வீர்கள். சில உறவுகளால் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். மனம் தெளிவு பெறும்.
Tags:
Rasi Palan