இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 254 பேர் உயிரிழப்பு..!!!


லெபனான் முழுவதும் இஸ்ரேல் இன்று (8) நடத்திய இராணுவத் தாக்குதல்களில் 254 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய இந்த வான்வழித் தாக்குதல்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும், லெபனான் மீதான தனது தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேல் அறிவித்திருந்த நிலையில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here