மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை மேலோங்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறவுகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். மனது லேசாகும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்பட வேண்டும். தாமதத்தால் சில பல பிரச்சனைகள் வரலாம். முக்கியமான இன்டர்வியூ, அப்பாயின்மென்ட் இருந்தால் குறிப்பிட்ட இடத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்று விடுங்கள். சோம்பேறித்தனம் வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். மற்றபடி வேலையும் வியாபாரமும் சுமூகமாக செல்லும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று நல்ல ஆதரவு கிடைக்கும் நாள். உங்களுடைய பேச்சுக்கு சபையில் மரியாதை கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். இறைவனின் அருளால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். மனதிற்கு பிடித்த நபரோடு நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவழிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்த மிகப்பெரிய பாரம் குறையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். பிள்ளைகளுடைய கல்வியில் இருந்த தடைகள் விலகும். மேற்படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிரிகளை கூட மன்னித்து நண்பர்களாக ஏற்றுக் கொள்வீர்கள். பிரச்சனைகள் தீரும் நாள். பஞ்சாயத்துக்கு ஒரு முடிவு கிடைக்கும். பல நாள் சொத்து பிரச்சனைக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். உங்களுடைய மனமாற்றம், உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மேன்மையோடு நடந்து கொள்கிறீர்கள். பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உங்களிடத்தில் வெளிப்படும். புது மனிதர்களின் அறிமுகம் மனதிற்கு இதமான அனுபவத்தை கொடுக்கும். புது அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி இருக்கும். பல குழப்பத்திற்கு பதில் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். எதிரி தொல்லை நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். அவமானப்பட்ட இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். எதிரிகள் முன்பு நன்றாக வாழ்ந்து காட்டுவீர்கள். மனப்பாடம் குறையும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு செயல்பட வேண்டும். அதிகம் பேசக்கூடாது. பிரச்சனையில் சிக்கலில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. எந்த விஷயத்திலும் அகல கால் வைக்காதீங்க. தெரியாத வேலையில் மூக்கை நுழைக்க வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். புது முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். சுபமான நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடமைகளில் இருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வெயில் சமயத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். நிறைய தண்ணீர் குடிக்கவும்.
Tags:
Rasi Palan