மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..!!!


வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படிப்பட்ட சூரியன் ஆன்மா, தந்தை, ஆற்றல், தலைமைத்துவம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதியும் கூட.

தற்போது சூரியன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் மே மாதத்தில் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு, ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரனின் ராசிக்குள் சூரியன் நுழைவது சற்று சிறப்பானது. இந்த சூரிய பெயர்ச்சியானது மே 15 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த ரிஷப ராசியில் சூரியன் ஜூன் 22 ஆம் தேதி வரை இருப்பார்.

இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். முக்கியமாக சில ராசிக்காரர்களுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கக்கூடும். குறிப்பாக பல முக்கியமான வேலைகள் முடிவடையும், நிதி நிலைமை உயரும், சமூகத்தில் அந்தஸ்து உயரும். இப்போது ரிஷப ராசிக்கு செல்லும் சூரியனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும்.

இருப்பினும், எந்த ஒரு முடிவையும் விவேகமாக யோசித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை வலுவடையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும், வேலைப்பளுவால் மிகுந்த சோர்வை சந்திக்க நேரிடும். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும்.


சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரிய பெயர்ச்சியின் போது சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். அரசு வேலை செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

தலைமைத்துவ திறன்கள் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். புதிய வருமான வழிகள் உருவாகலாஙம். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் இக்காலத்தில் அகங்காரத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்படும்.

கடகம்

கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வேலைகள் ஒவ்வொன்றையும் வேகமாக முடிப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
Previous Post Next Post


Put your ad code here