எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக நடிகை ஜனனி மிளிர வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிக்பொஸ் ஜனனி என அழைக்கப்படும் நடிகை ஜனனியை அமைச்சர் நேற்றைய தினம் காலை தனது அலுவலகத்தில் சந்தித்ததுடன் , இரவு , யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியிலும் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் தனது உத்தியோகப்பூர்வ முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பிக்பாஸ் ஜனனி, நடிகை ஜனனி, அறிவிப்பாளர் ஜனனி என எவ்வாறான பாதைகளில் இருந்தாலும், அவர் எம்முடைய சமூகத்தின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார் என்ற உணர்வை எமது சந்திப்பு மேலும் உறுதிப்படுத்தியது.
எங்களின் அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.
அன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறியப்பட்ட ஜனனியை விட, இன்று தனது திறமைகள், சுயநம்பிக்கை மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான கலைஞராக அவர் வளர்ந்து வருவது பாராட்டத்தக்கது.
அவ்வாறான ஆளுமைமிக்க ஜனனிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக அவர் விளங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news
.jpg)