மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். இன்றைக்கான வேலையை நாளை செய்யலாம் என்று தள்ளிப் போடவே கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உடனடியாக சரி செய்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று லாப நஷ்ட கணக்கை பார்த்து வேலை செய்வீர்கள். ஆதாயம் இல்லாமல் ஒரு வேலையை கையில் எடுக்க மாட்டீர்கள். இந்த நாள் கொஞ்சம் சுயநலம் நிறைந்த நாளாக தான் இருக்கும். உங்களை குறை சொல்ல முடியாது. உங்கள் சூழ்நிலை அப்படி இருக்கும். இறை வழிபாடு செய்யுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சிந்தனை மேலோங்கும். உங்களுடைய வேலைகளை செய்ய விடாமல் தடுக்கும். தேவையில்லாத சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு, வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்தினால் மிகவும் நல்லது. அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்க வேண்டும். வீண் வம்பு வழக்கில் தலையிடக்கூடாது.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உழைப்பு உழைப்பு என்ற வார்த்தை மட்டும்தான் கண்களுக்கு தெரியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெயில் நேரத்தில் வெளியே செல்லாதீங்க. தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யக்கூடிய மனப்பான்மை வெளிப்படும். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். எதிரி தொல்லை நீங்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று பேராசை கூடாது. அடுத்தவர்களுடைய வாழ்க்கையை பார்த்து ஆசைப்படக் கூடாது. பேராசை பெரும் நஷ்டம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. மனதை ஒருநிலைப்படுத்துங்கள். காலையில் இறை வழிபாடு செய்து தியானம் செய்வது நன்மையை செய்யும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் முடிக்க முடியாத வேலையை இன்று கையில் எடுங்கள், எந்த ஒரு சிரமமும் இல்லாமல் காரிய வெற்றி கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வேகத்தை விட, விவேகம் தான் அதிகமாக இருக்கும். உங்களுடைய காரியத்தில் நீங்கள் குறியாக இருப்பீர்கள். திறமை வெளிப்படும் நாள். வசீகரத் தோற்றம் வெளிப்படும். காதல் கைகூடி திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று இரட்டிப்பு சந்தோஷத்தில் மூழ்கி போக வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள் பட்ட கஷ்டத்திற்கு ஒரு பலன் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நடக்க நல்லதொரு வாய்ப்பை கடவுள் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பான்.
மகரம்
மகர ராசி காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏமாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு விஷயத்திலும் அதிக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். கடமையை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காமல் இருந்தால், இந்த நாள் இனிய நாளாக அமையும். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். தேவையற்ற பஞ்சாயத்துகளில் தலையிடக்கூடாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று சாதனை படைக்கும் நாள். வெற்றி அடையும் நாள். உங்களுக்கான நல்லது வெளிப்படக்கூடிய நாள். பலவிதமான சோதனைகளைக் கடந்து வந்து, இந்த நாளை பெறப்போகிறீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். சந்தோஷம் இரட்டைப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நம்பர் ஒன் இடம் கிடைக்கும். என்ஜாய் பண்ணுங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது மனிதர்களின் அறிமுகம், புது அனுபவத்தை கற்றுக் கொடுக்கும். சுப செலவுகள் ஏற்படும். கொஞ்சம் உடல் அசதியும் உண்டாகும். வெயில் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.
Tags:
Rasi Palan