மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கைநிறைய சம்பாத்தியம் கிடைக்கும். லாபம் நிறைந்த இந்த நாளை நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய முதலீடுகள் செய்யலாம். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்லதே நடக்கும். எதுவாக இருந்தாலும் பிள்ளையாரை வணங்கி விட்டு உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காரிய தடை இருக்காது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் வியாபாரத்தில் சுறுசுறுப்பு இருக்கும். தேவைக்கும் அதிகமான பணம் கையில் இருக்கும். சேமிப்பை மேற்கொள்ள வேண்டும். அனாவசிய செலவு குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். பொன் பொருள் சேர்க்கை உண்டு.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். உங்களால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்வீர்கள். மன நிம்மதி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பின்தங்கி இருந்த வேலைகளை கையில் எடுத்து, முதலில் முடித்து விடுவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சுறுசுறுப்பு உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் முழு வெற்றியை கொடுக்கும். தேவையில்லாத எதிரி தொல்லைகள் விலகும். மருத்துவ செலவு குறையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். எதிர்காலத்திற்கு தேவையான நல்ல முடிவுகளையும் எடுத்து, சாதனை படைக்கக்கூடிய நாள் இன்று.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மனக்குழப்பம் இருக்கும். வாழ்க்கைக்கு தேவையான தெளிவான முடிவை எடுக்க முடியாது. சிந்தித்து செயல்படுங்கள். அனுபவசாலிகளின் பேச்சைக் கேளுங்கள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுடைய மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். வேலையும் வியாபாரமும் எப்போதும் போல சுமூகமாக செல்லும். மன நிம்மதி கிடைக்கும் நாள் இன்று.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று சின்ன சின்ன எதிர்ப்புகள் இருக்கும். முன்கோபம் வரும். வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உண்டாகும். நிதி பற்றாக்குறை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த நாளை கவனமாக எடுத்துச் செல்ல வேண்டும். கூடுமானவரை புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். சோம்பேறித்தனம் வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சிந்தனை அதிகரிக்கும். தேவையற்ற யோசனை, உங்களுடைய கடமைகளை சரியாக செய்ய விடாது. கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான பொறுப்புகளை கையில் எடுக்கும் போது அலட்சியம் வேண்டாம். புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். கூடுமானவரை நண்பர்களோடு வெளியிடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மேன்மையாக நடந்து கொள்வீர்கள். நிதானம் வெளிப்படும். பக்குவம் வெளிப்படும். நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வேலையினும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். மன நிம்மதி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை இரட்டிப்பாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடியுங்கள். வெயில் நேரத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.
Tags:
Rasi Palan