மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம், மன நிறைவோடு இருக்கும். நீண்ட நாள் கைக்கு வந்து சேராத பணம், வந்து சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உயர் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களோடு இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மனதில் நிம்மதியாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்கவும். வெயில் சமயத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம், என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு விலகி மன நிம்மதி கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் இருந்து வந்து டென்ஷன் குறையும். பேச்சாற்றல் வெளிப்படும். வசீகரத் தோற்றத்தால் அனைவரையும் கவருவீர்கள். முதலீட்டில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை குறைப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று துணிச்சலோடு செயல்படுவீர்கள். உங்களுடைய பேச்சில் தெளிவு இருக்கும். மன பயம் விலகும். நீண்ட நாள் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த விஷயங்களை வெளிப்படையாக பேசி விடுவீர்கள். மன பாரம் இறங்கும். நல்லதே நடக்கும். இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும் நாள் இன்று.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் இருக்கும். எதிரி பிரச்சனைகள் இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் சில பின்னடைவுகள் வரலாம். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மூன்றாவது நபரையும் முழுசாக நம்பாதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. கூடுமானவரை வீண் விரைய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆடம்பர செலவும் வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அலட்சியம் இருக்கக்கூடாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுடைய மனது இன்று லேசாக இருக்கும். மனதில் இருந்த குப்பைகளை எல்லாம் தூக்கி வெளியே போட்டு விடுவீர்கள். பழிவாங்கும் எண்ணம் நீங்கும். எதிரிகளை மன்னித்து விடுவீர்கள். மேன்மையான குணம் வெளிப்படும் நாள் இன்று. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. இன்பம் இரட்டிப்பாகும் நாள். மனதிற்கு பிடித்த நபருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் இதுவரை எதிர்பாராத நன்மைகள் நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். சோகமாக தான் இந்த நாள் துவங்கும். இருந்தாலும் போகப்போக மதியத்திற்கு மேலாக சுறுசுறுப்பு வெளிப்படும். வேலைகளும் வியாபாரத்திலும் கவனம் இருக்கட்டும். நம்பிக்கையான நபர்களை கூடவே வைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். புது முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். கடன் சுமை விலகும். மன நிம்மதி கிடைக்கும் நாள் இன்று.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கடமை உணர்ச்சி அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். உழைப்பு உழைப்பு என்று இந்த நாள் ஓடிவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவையான நேரத்தில், தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும்.
Tags:
Rasi Palan