மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து உங்களுடைய கடமையில் கவனத்தோடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த நாளை துவங்குவதற்கு முன்பு இறைவழிபாடு செய்யுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் பிரச்சனைகளை கண்டு சோர்ந்து போய் உட்காரவே கூடாது. கவனத்தோடு செயல்படுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சோதனைகள் நிறைந்த நாளாக தான் இருக்கும். சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். உங்கள் மனது நோகும்படி சில சம்பவங்கள் நடக்கலாம். பிரச்சனைகள் வரலாம். இருப்பினும் நம்பிக்கையை கைவிடாமல் இந்த நாளை நடத்திச் செல்லுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். உங்களுடைய பேச்சில் நிதானம் இருக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை வெளிப்படும். பலவிதமான பக்குவங்களை, இன்றைய அனுபவம் உங்களுக்கு கொடுக்க போகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். கவலைகளை ஓரம் வைத்துவிட்டு கடமையில் கவனத்தோடு செயல்படுங்கள். நிச்சயம் வெற்றி உங்களை வந்து சேரும். நேரத்தை வீணடிக்க கூடாது. ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். வாக்குவாதங்கள் பிரச்சனைகள் வரும். உறவுகளோடு சின்ன சின்ன மன கசப்பான சம்பவங்கள் நடக்கலாம். நிதானதோடு செயல்படுங்கள். முன்கோபம் வேண்டாம். விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்லது நடக்கும். லாபம் அதிகரிக்கும். வாரா பணம் உங்கள் கையை வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலையில் சுமுகமான போக்கு நிலவும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா புது விஷயங்களையும் சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய சுறுசுறுப்பு பல மடங்கு அதிகரிக்கும். நல்ல பெயர் கிடைக்கும். பெயர் புகழ் அந்தஸ்து உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நிதிநிலைமை மேலோங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் அதிகரிக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு, உயர் கல்விக்கு தேவையான பணம் சரியான நேரத்தில் கிடைக்கும். உயர் கல்வியை தொடர எந்த தடையும் வராது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனது கொஞ்சம் சோகமாக தான் இருக்கும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். தேவையில்லாத விஷயங்களை போட்டு மனதில் குழப்பிக் கொள்ள வேண்டாம். மனதை குப்பை தொட்டி போல் வைத்துக் கொள்ளாதீர்கள். இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு இருக்கு. பிரச்சனைகளை தூக்கி போட்டுவிட்டு வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். எதிரிகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். செல்லும் இடமெல்லாம் சீரும் சிறப்பு, மரியாதையும் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொண்டால் எதிர்காலத்திற்கு நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது மனிதர்களின் அனுபவம், புது விஷயங்களை கற்றுக் கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய கடமைகளில் இருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள்.